இவைகளில் அன்பே பிரதானம்Sample
ஆலோசனைக்காகவும், ஜெபத்திற்காகவும் வரும் பெற்றோர், விரக்தியில், ஊழியர்களாகிய எங்களிடம் கூறும் பொதுவான காரியம் என்னவென்றால்: “பாஸ்டர், என்னுடைய 8 வயது பையனுக்கு, அவன் விரும்புகிறதை எல்லாம் கொடுக்கிறேன். ஆனால் அவன் என்னுடைய தியாகங்களை புரிந்துகொள்ளாமல், முரட்டாட்டம் உள்ளவனாக, ஏனோதானோவென்று இருக்கிறான். நான், காலை 9 முதல் மாலை 5 மணி வரை உழைக்கிறேன். அவன் விரும்பும் காரியங்களை வாங்கிக் கொடுப்பதற்காக, சில சமயம் அதிக நேரம் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கிறேன். ஆனால் என் மகனுடைய கவனமெல்லாம் சிதறிக்கிடக்கிறது. அவனால் படிக்க முடியவில்லை. அவனுக்கு பிசாசு பிடித்திருக்கிறதா?”
உங்கள் வாழ்க்கையிலும் இப்படி உண்டா? உங்களுடைய பிள்ளையுடன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் தனித்து செலவிடுகிறீர்கள் என்பதை சற்று நிதானமாக சிந்தித்துப்பாருங்கள். எத்தனை முறை உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து கிருபாசனத்திற்கு முன்பாக முழங்காற் படியிட்டிருக்கிறீர்கள்? பிள்ளை ஒரு காரியத்தை தவறாய் செய்யும் போது கடிந்து கொள்ளும் நீங்கள், அவன் சரியாய் செய்யும்போது தட்டிக்கொடுத்து ஊக்குவிகிறீர்களா? உங்கள் மகனுக்குத் தேவை பொருட்கள் அல்ல, நீங்கள்!
இதைத் தெள்ளத்தெளிவாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய ஸ்தானத்தை தொலைக்காட்சி பெட்டி எடுத்துக்கொள்ள முடியாது!! உங்கள் மகனுக்கு நீங்கள் அதிகமாக தேவைப்படும் நேரத்தில், அவன் கம்ப்யூட்டர் கேம்ஸ் தனிமையில் விளையாடிக் கொண்டிருந்தால், அது உங்களுக்கு மாற்று அல்ல!! உங்கள் மகனுக்கு நீங்கள் எடுத்துக் கொடுக்கும் துணிமணிகள் உங்களுடைய பிரசன்னத்துக்கு ஈடாக முடியாது.
Scripture
About this Plan
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More