பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள்மாதிரி
நான் 60 மணி நேரமாக பிரசவ வலியோடு சுக பிரசவத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அந்த நாட்களின் வேதனையை, பதட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சிலர் அந்த வேதனையை குறையாக பேசுவார்கள். சிலர் அந்த வலியை தாய்மையின் பெருமைக்குரிய ஒன்றாக பேசுவார்கள். நான் அந்த இரண்டாவது வகை. தாய்மையின் வேதனைகளில் பெருமைப்படுகிறேன்.
ஆனால் அந்த பெருமையான உணர்வை மறக்கடித்தது அந்த புதிய அனுபவங்கள். எனது மகன் பிறந்த ஆரம்ப மணி நேரங்களில் அவன் அடிக்கடி இரவுகளில் அழுவான். பெற்ற தாயான எனக்கு அவன் ஏன் அழுகிறான் என்று புரியாது. “இந்த அழுகையின் காரணம் என்ன? அவனுக்கு பசியெடுக்கிறதோ? வேறெதும் காரணமாக இருக்குமோ? சரியான காரணத்தை எப்படி அறிந்து கொள்வது? நர்ஸ் அம்மா எங்கே??”
என் குழந்தையை முதன்முதலில் பார்த்த போது ஒர் இனம் புரியாத மகிழ்ச்சியும், தேவன் ஈவாக அளித்த வாழ்க்கைக்காக நன்றியுணர்வும் ஏற்ப்பட்டது. அதோடு கூட பயமும் கலக்கமும் சேர்ந்தே ஏற்பட்டது. ஒரு தாயாக நான் பக்குவபடவில்லை என்ற உணர்வு. அனுபவம் இல்லாத நான் பிள்ளைவளர்ப்பை எப்படி கையாள போகிறேன் என்ற பயம்.
உண்மையை சொல்லவேண்டுமானால் இன்றும் அந்த உணர்வு நீடிக்கிறது. ஆனால் வேத வார்த்தைகளை நம்புகிறேன்.
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5
தேவன் கிருபையாக எனக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அதை வளர்க்க தேவையான ஞானத்தை அவரிடமே கேட்கும் தாழ்மையையும் தந்து, பிள்ளை வளர்ப்பில் இந்நாள் வரை எஙகளை ஆச்சரியமாக நடத்தி வருகிறார். அரப்பணிப்பின் இருதயத்தோடு அவரிடம் செல்லும் யாவருக்கும் அவர் கற்றுக் கொடுத்து நடத்துவார். தேவன் உண்மையுள்ளவர்.
கிறிஸ்துவை உடையவர்கள் சிலவற்றையும் உடையவர்கள். அவரே நமது ஞானம் என்று 1 கொரிந்தியர் 1:31ல் வாசிக்கிறோம். பிள்ளை வளர்ப்பிலும் அவரே உங்கள் ஞானமாக இருந்து உங்களை நடத்த விரும்புகிறார். உங்கள் பிள்ளைகள் தேவனுக்குள் வளர்வதை உங்களை காட்டிலும் அதிகம் விரும்புபவர் அவரே. அவர் தமது ஞானத்தை உங்களுக்கு சம்பூரணமாக அளிக்க விரும்புகிறார். பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா?
பிள்ளைவளர்ப்பில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சவால்களிலும் தேவனின் சம்பூரண ஞானத்தை கேளுங்கள். அவர் நிச்சயம் உங்களை நடத்துவார்.
ஜெஸிக்கா பெனிக்
YouVersion உள்ளடக்க மேலாளர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது.
More