பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள்மாதிரி
என் தகப்பனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். நான் இளையவள். எங்கள் குழந்தை பருவம் செப்பு சாமான், பொம்மைகள் போன்ற அமைதியான, நன்னடத்தை கொண்ட பாதுகாப்பான விளையாட்டுகளால் நிறைந்திருந்தது. இப்போதோ, ஐந்து வயதிற்குட்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளின் தாயாக என் வீட்டின் தற்போதைய சூழல், எனது குழந்தை பருவ நாட்களை விட முற்றிலும் மாறுபட்டு தோன்றுகிறது. என் பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை பார்க்கும்போது அவர்களுக்காக என் ஜெபம் எவ்வளவு அவசியம் என்று புரிந்து கொண்டேன். பிள்ளைகளை கையாளுவதை குறித்து என் மாமியாரின் எச்சரிக்கைகளோடு அவசர வார்டு செவிலியர் போன்று கருத்தாய் செயல்பட வேண்டி இருந்தது.
. குறுகிய காலத்திலேயே என் பிள்ளை வளர்ப்பு பயணம் நான் கற்பனை கூட செய்து பார்க்காத அளவிற்கு ஏதோ ஒரு சாகச பயணம் போலவே எனக்கு தோன்றியது. ஒரு முறை தவறி அவன் மீதே விழுந்திருப்பேன்! விழுந்ததில் என் பற்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வருடத்திற்குள்ளே மற்றொரு தருணத்தில் அவன் தலைகீழாக விழுந்து அவன் தலையில் மூன்று தையல் போட வேண்டிய சூழ்நிலை. அவனுக்குள் இயல்பாகவே இருந்த இந்த சுட்டுத்தனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னை வேதனையில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறையும் சூழ்நிலை என் கைகள் மீறியே காட்சியளித்தது. நடந்த எதையும் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை என்று உணர்ந்த போது, என் முழங்கால்களை முடக்கினேன்.நமது பிள்ளைகள் நம்மால் பாதுகாக்கபடவும், போஷிக்கப்படவும், தேவ கிருபையிலே, விசுவாசத்திலே வளர்க்கப்படவும், வாழ்க்கையில் சரியான பாதையில் வழிநடத்தப்படவும் தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஈவு. அவர்கள் வாழ்வின் முக்கிய திருப்பங்களையோ, அன்றாட நிகழ்வுகளையோ நம்மால் முழுமையாக கட்டுபடுத்த முடியாது. ஒரு பெற்றோராக நமது பிள்ளைகளை தேவ பக்தியில், ஒழுக்கத்தில், அன்பிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளர்ப்பதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டு, கட்டுபடுத்தும் ஆளுமையை தேவனிடம் விட்டு விடுவோம். நமது கவலைகள், பாரங்கள், ஏமாற்றங்கள் அனைத்தையும் ஆண்டவருடைய பாதத்தில் இறக்கி வைத்து விடுவோம். அவர் கையில் கொடுத்த எதையும் நாம் கட்டுபடுத்த முயலவேண்டிய அவசியம் இல்லை
நமது குழந்தைகளுக்காக ஜெபிப்பதற்கோ, அவர்களை முழுமையாக தேவனுடைய ஆளுகைக்கு ஒப்புகொடுக்கவோ தயங்க வேண்டாம். நம்மை காட்டிலும் நமது பிள்ளைகளை அதிகம் நேசிப்பவர் அவரே. எல்லாம் வல்ல அவர் கரங்களில் அனைத்தையும் ஒப்படைப்பதே சாலச்சிறந்தது.
லிசா க்ரே
YouVersion உள்ளூராக்கத்துறை மேலாளர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது.
More