பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள்மாதிரி
பிள்ளைகளை வளர்தெடுப்பது கடினமான, வெறுமனான மற்றும் எளிமையான ஒன்று. நமது குழந்தைகளை நாம் வளர்த்து வந்த காலத்தை நினைத்து பார்ப்பது மிக எளிது-அவர்கள் எவ்வளவு சிறியதாக இருந்தார்கள், அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தார்கள் என்றும் அவர்கள் ஏதோ ஒரு செவ்வாய்க்கிழமை அன்று, வீட்டின் மூலையில் கத்திக் கொண்டிருக்கும் போதும் எவ்வளவு ஆசீர்வாதம் அவர்களை ஆடிக்கொண்டிருந்தது!
பெற்றோராக, குழந்தை வளர்ப்பு மன அழுத்தில், 1 தெசலோனிக்கேயர் 5: 16-18 நமக்கு தெளிவாகத் பார்க்கவும் மற்றும் வேறு கண்ணோட்டத்தையும், இந்த மாதிரியான காலத்தில் நமக்கு அளிக்கிறது.
எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்
இந்த கடினமான தருணங்களில் நம்ிக்கையின்மையை விட்டுவிடுங்கள். இன்றைய தினத்தில் நீங்கள் ஒரு பெற்றோராய் இருப்பது ஒரு உன்னதமான மற்றும் தகுதிவாய்ந்த அழைப்பாகும் என்பதை நினைவில் வையுங்கள், தேவன் நமக்கு கொடுத்துள்ள ஒரு பாக்கியம், ஆகும். அு போல் இன்று நீங்கள் உணரவில்லை என்றாலும் கூட, ஒருநாள் பலனைக் காண்போம்.
ஜெபிப்பதை விட்டு விடாதிருங்கள்
நமது குழந்தைகளுக்கு தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் இருப்பை விட வேறு எதுவும் தேவையில்லை. ஆகையால், பெற்றோர்களாக நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் ஜெபத்தில் நமது குழந்தைகளை வளர்ப்பதகும்.எல்லாம் நம்மைச் சுற்றிலும் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல உணர்கிற போதிலும் கூட 1 தெசலோனிக்கேயர் 5:17இல்" இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்" என்று நமக்கு சொல்கிறார்.
நன்றியுடன் இருங்கள்
நமது குழந்தைகளுக்காக நன்றியுடன் இருப்பது சில நாட்கள் எளிதானது மற்றும் மற்றவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் அந்த கடினமான நாட்களில், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் காலியாக இயங்குவதைப் போல் உணரும்போது, அது பிரார்த்தனையில் தேவனிடம் வர சிறந்த நேரங்களில் ஒன்றாகும். உங்கள் மகிழ்ச்சியை புதுப்பிப்பதற்காக அவரிடம் கேளுங்கள், உங்கள் பிள்ளைகளுக்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். அவர் உங்களுக்கு வலிமை, மகிழ்ச்சி, நன்றியுணர்வை அளிப்பார். நாம் பெற்றோரின் வளர்ப்பு பாதையில், கடினமான நாட்களில் தேவனை பற்றிக் கொள்ள கற்றுக் கொண்டால், நமது குழந்தைகளுக்காக நன்றி சொல்ல மட்டுமே முடியும்!
கேசி கேஸ்
YouVersion ஆதரவு தலைவர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது.
More