பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள்மாதிரி
குறுகிய இரண்டு வருடங்களில், என்னுடைய மூத்த மகள் கல்லூரிக்குச் சென்றுவிடுவாள். இதை என் மனம் ஏற்க மறுக்கிறது, ஆனால் அவள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறாளா என்பதை அறிய நான் அங்கு இருக்கமாட்டேன். ஆகையால், பிற்காலத்தில் அவள் சரியானக் காரியத்தைச் செய்யப் போராடிக் கொண்டிருக்கும்போது என்னுடைய சத்தத்தை அவள் தன் சிந்தையில் கேட்கும்படிக்கு என்னால் இயன்ற எல்லாவற்றையும் நான் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறேன். அதனினும் மேலாக, அவள் கேட்பது தேவனின் சத்தமாயிருந்தால் எப்படியிருக்கும்? ஏனெனில் அவர் எப்பொழுதும் அங்கேயிருப்பார்—நான் இருக்க இயலாத நேரங்களில் கூட.
நம்முடைய குழந்தைகள் தேவனுடைய சத்தத்தை உணர்ந்துகொள்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள மிகச்சிறந்த வழி அவருடைய வார்த்தையை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதேயாகும், ஆனால் வெறுமனே அதை அவர்களுக்குச் சொல்வது—அல்லது அதை மனப்பாடம் செய்ய அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும்கூட—போதுமானதாக இருக்காது. தேவவார்த்தையின் வல்லமையினால் நீங்கள் உங்கள் குழந்தைகள் மறுரூபமாக்கப்படுவதைக் காணவிரும்பினால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் உண்மையான பாதிப்பு மற்றும் அனுதினம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் இவைகளின் மூலமாக அது உங்களுக்குள்கிரியை செய்வதை அவர்கள் பார்க்கவேண்டும். சாப்பிடும்போது அதைப்பற்றி பேசுங்கள். வாகனத்திற்குள் அதைக் கொண்டுசெல்லுங்கள். மற்றவர்களுடனான உரையாடல்களில் இயல்பாக அதை சேருங்கள். தேவனுடைய சத்தம் மற்றும் அவருடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்கள் தெளிவாகப் பார்க்க உதவுங்கள்.
அதே தேரத்தில், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதன் மூலம் உங்கள் குழந்தைகள் தாங்களாகவே வேதத்தை ருசிக்க உதவிசெய்யுங்கள். அவர்கள் தாங்களாகவே வேதம் வாசிப்பதையும், பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுப்பதையும் கற்றுக்கொள்வது முக்கியமானதாகும். ஒரு வேதாகமத் திட்டத்தை தேர்வுசெய்ய அவர்களுக்கு உதவுங்கள், பின்பு அதைக் குறித்து கேள்விகள் கேட்டு சோதியுங்கள். உரையாடலைத் தொடங்க நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்களுக்கான சில ஆலோசனைகள் இங்கே உள்ளன:
- இந்தவாரம் நீங்கள் வேதாகமத்தில் வாசித்ததில் மிகச்சிறந்தது என்ன?
- உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஏதையாவது நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
- நீங்கள் வாசித்ததில் ஏதாவது ஒன்றைக் குறித்து இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
- நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பவைகளின் மூலமாக தேவன் உங்களிடம் என்ன சொல்கிறார்?
- நீங்கள் வாசித்தவைகளின் விளைவாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மாற்றக்கூடிய ஒரு காரியம் என்ன?
பெற்றோர்களாகிய நாம், தேவனைக் குறித்தும், அவருடைய இராஜ்யத்தைக் குறித்தும் நம்முடைய குழந்தைகளுக்குப் போதிப்பதில் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய உள்ளான மறுரூபமாகுதல் முழுமையடைய அவரை நம்புங்கள். நாம் நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக அவர் அவர்களை நேசிக்கிறார்.
மைக்கேல் மார்டீன்
YouVersion இணையதள வடிவமைப்பாளர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது.
More