பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள்மாதிரி
எங்கள் பிள்ளையை மருத்துவமனையில் இருந்து கொண்டு வரும் முன்பே இந்த வசனத்தை அவன் அறையில் தொங்கவிட்டிருந்தோம். ஒவ்வொரு இரவும் அவனை தூங்க வைக்கும் போது அதை பார்த்துக் கொள்வோம். இந்த பிள்ளையின் பெற்றோராக தேவன் எங்கள் மீது வைத்திருக்கும் அழைப்பையும் பொறுப்பையும் அது எங்களுக்கு நினைவூட்டும்.
பிள்ளைகளின் விசுவாச அடித்தளத்தை அமைக்கும் முக்கியமான பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடையே உள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ ஒவ்வொரு நாளும் நமது விசுவாசத்தை படத்தை பிள்ளைகள் மனதில் வரைந்து கொண்டிருக்கிறோம். ஊட்டிக் கொண்டு இருக்கிறோம். நாம் பேசும் வார்த்தைகள், நம் செயல்கள், நாம் ஒன்றை எதிர் கொள்ளும் விதம், இவைகள் தான் பிள்ளைகள் மனதில் படம் வரையும் வர்ண தூரிகை. சரியான விசுவாசத்தை பிள்ளைகள் மனதில் பதிய வைப்பது ஒவ்வொரு நாளும் நம்மை அச்சுறுத்தும் ஒன்று. Painting a perfect picture can feel daunting to live out in the day-to-day life of parenting. தூங்கா இரவுகள், குடும்ப பொறுப்புகள், வேலை பளூ, இவைகளின் மத்தியில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பது எளிதல்லவே. சொந்த பெலத்தில் இவை அனைத்தும் கடினமே. ஆகவே தான் தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார். நம்மை காட்டிலும் நமது பிள்ளைகளை அதிகமாக நேசிப்பது அவரே!
உங்கள் பிள்ளைகளை தேவனுக்கு நேரே நடத்த உதவும் இரண்டு எளிய முறைகள்.
1. ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளோடும் ஜெபியுங்கள்.உங்கள் பிள்ளைகளின் விசுவாச அடித்தளத்தை உறுதிப்படுத்த ஜெபம் அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளோடும் ஜெபியுங்கள். பிள்ளைகளுக்காக ஜெபிப்பதை ஒரு நாளும் நிறுத்தி விடாதீர்கள். அவர்களின் நிகழ்கால சூழ்நிலைகள் தேவனை மறக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் தேவனை விட்டு தூரம் சென்றாலும், தேவன் தூரமானவர் அல்லவே. ஜெபியுங்கள். சூழ்நிலைகள் மாறும்.
2. தனியாக செய்யாதீர்கள். பிள்ளைகளை சரியான முறையில் வளர்ப்பதற்கு பெற்றோர் மாத்திரம் போதாது. சமூக மக்களின் ஆதரவு தேவை. குடும்பமாக ஆலயத்திற்கு செல்லுங்கள். சபை குடும்பத்தில் இணைந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை வளர்ப்பின் பிரயாணத்தில் நீங்கள் சார்ந்து கொள்ளத்தக்க தேவ பிள்ளைகள் நிறைந்த ஒரு சிறிய வட்டத்தை தேர்ந்தெடுத்து இணையுங்கள். சமூக வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கு தேவை. பிள்ளைகள் விசுவாச வாழ்க்கையில் வளரவும் அது அவசியமாக இருக்கிறது - விசுவாசத்தை ஊட்டும் ஆவிக்குரிய உறவுகள்.
பிள்ளைகளின் வாழ்வில் விசுவாசத்தை விதைக்க துவங்க சரியான நேரம் என்றில்லை. நீங்கள் இப்பொழுதே துவங்கலாம். ஜெபத்தோடு உங்கள் பிள்ளைகளின் விசுவாசப் பாதையை துவங்கி வையுங்கள். அவர்கள் தேவனுக்கு நேரே இப்போதிருந்தே வழிநடத்தப்படட்டும்.
டோட் டாபர்ஸ்டெயின்
YouVersion தயாரிப்பு மேலாளர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது.
More