அன்பும் திருமணமும்மாதிரி
இந்தப் பகுதி விபசாரத்தைப் பற்றி விமரிசித்தாலும் உங்கள் திருமண வாழ்வு உத்வேகத்துடனும் மனநிறைவுடனும் அமைவதற்குரிய நல்ல ஆலோசனையும் கூறுகிறது. இந்தப் பகுதியை சத்தமாக வாசித்த பின்னர் உங்கள் வாழ்க்கைத்துணைவரிடம் முதன்முறையாக உங்களைக் கவர்ந்தது என்னவென்றும் இன்றைக்கும் அவரிடம் உங்களுக்குப் பிடித்தவை என்னவென்றும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் திரும்ண வாழ்வில் என்ன குறை என்பதை விவாதிப்பதைத் தவிர்த்து, உங்கள் காதலாடும் காலத்தைப் பற்றிய கதைகளையும், உங்கள் ஒருமித்த காலத்தின் சிறப்புகளையும் பற்றி நினைவுக்குக் கொண்டுவாருங்கள். உங்கள் மலரும் நினைவுகள் உங்களை எப்படி நடத்துகிறதோ அதன்படி நீங்கள் ஜெபத்தோடோ அல்லது ஜெபமின்றியோ முடிக்கலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது திருமண வாழ்வை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கர்த்தர் தாமே நமது உறவைக் குறித்த புதிய கருத்துகளை நமக்கு வெளிப்படுத்தவும் நமது உறவை பலப்படுத்தவும் ஏதுவாகிறது. இந்த அன்பும் திருமணமும் வாசிப்புத் திட்டமானது சம்பந்தப்பட்ட வேதபகுதி மூலமாக தினமும் துரிதமாக நம் துணைவருடன் கலந்தாலோசித்து ஜெபம் செய்யும்படியான எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இந்த ஐந்து நாள் திட்டம் வாழ்நாள் முழுமைக்கான உங்கள் உறவின் பொறுப்புணர்வை செயல்படுத்த உதவும் ஒரு சுருக்கமான திட்டமாகும்.
More
இந்த அன்பும் திருமணமும் திட்டத்தை வழங்கிய Life.Church க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church குறித்த மற்ற விபரங்களுக்கு www.life.church என்ற அவர்களது இணையதளத்தை பார்க்கவும்.