அன்பும் திருமணமும்மாதிரி
கர்த்தர் நம் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளையும் செயல்பங்குகளையும் கொடுத்திருப்பது நம் சுதந்தரத்தை அழித்துப்போட அல்ல. வாழ்க்கை எந்த முறையில் சிறப்பாக இயங்குமென்று நாம் அறிய வேண்டுமென்று விரும்புகிறார். அன்பு, மரியாதை மற்றும் பணிவடக்கம் இவற்றைப் பற்றிய இன்றைய பகுதி நாகரீக பழக்கங்களுக்கு ஒத்துவராது; ஆனால் திருமணத்தை ஏற்படுத்தி வைத்தவருக்கு அதை செழிக்கச் செய்வது எப்படியென்று தெரியும். இந்த பகுதியை சத்தமாக சேர்ந்து வாசித்த பின்னர் இதில் விளங்கிக்கொள்ளவோ, கடைப்பிடிக்கவோ மிகவும் கஷ்டமான காரியத்தைப் பற்றிப் பேசுங்கள். உங்களுக்குக் கொடுக்கப் பட்ட செயல்பங்கில் கர்த்தருக்கு மகிமையும் உங்கள் வாழ்க்கைத் துணையாளருக்கு கௌரவமும் ஏற்படுத்தக் கூடிய முறையில் உங்களை கர்த்தர் வழிநடத்தும்படி சேர்ந்து ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது திருமண வாழ்வை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கர்த்தர் தாமே நமது உறவைக் குறித்த புதிய கருத்துகளை நமக்கு வெளிப்படுத்தவும் நமது உறவை பலப்படுத்தவும் ஏதுவாகிறது. இந்த அன்பும் திருமணமும் வாசிப்புத் திட்டமானது சம்பந்தப்பட்ட வேதபகுதி மூலமாக தினமும் துரிதமாக நம் துணைவருடன் கலந்தாலோசித்து ஜெபம் செய்யும்படியான எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இந்த ஐந்து நாள் திட்டம் வாழ்நாள் முழுமைக்கான உங்கள் உறவின் பொறுப்புணர்வை செயல்படுத்த உதவும் ஒரு சுருக்கமான திட்டமாகும்.
More
இந்த அன்பும் திருமணமும் திட்டத்தை வழங்கிய Life.Church க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church குறித்த மற்ற விபரங்களுக்கு www.life.church என்ற அவர்களது இணையதளத்தை பார்க்கவும்.