அன்பும் திருமணமும்மாதிரி
உங்கள் வாழ்க்கைத்துணைவரை சகோதரியாகவோ சகோதரனாகவோ பாவிக்க முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம்தான் - ஆனால் இந்தப் பகுதியில் ஒரு சிறந்த வசனம் நாம் ஒருவரையொருவர் கிறிஸ்துவுக்குள் சகோதரராகப் பாவித்து அன்புகூர வேண்டுமென்று நினைவுபடுத்துகிறது. இந்தப் பகுதியை சேர்ந்து வாசித்த பின்னர், உங்கள் உறவைப் பற்றி இதில் கூறப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பற்றிப் பேசுங்கள். உங்களுடன் ஒரே வீட்டில் வசிக்காத பிற கிறிஸ்தவ நண்பரை நன்கு உபசரிக்கும் இலேசான முறைகளைப் பற்றிப் பேசி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்வு எப்படி அமைய வேண்டுமென்று கர்த்தர் தம் அன்பினால் உதாரணம் காட்டினார் என்று கர்த்தருடன் நீங்களும் சேர்ந்து பேசுங்கள். உங்கள் இருவரையும் கர்த்தரின் மாறாத அன்பை சுட்டிக்காட்டும் வழிகாட்டிகளாக்க அவரையே கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது திருமண வாழ்வை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கர்த்தர் தாமே நமது உறவைக் குறித்த புதிய கருத்துகளை நமக்கு வெளிப்படுத்தவும் நமது உறவை பலப்படுத்தவும் ஏதுவாகிறது. இந்த அன்பும் திருமணமும் வாசிப்புத் திட்டமானது சம்பந்தப்பட்ட வேதபகுதி மூலமாக தினமும் துரிதமாக நம் துணைவருடன் கலந்தாலோசித்து ஜெபம் செய்யும்படியான எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இந்த ஐந்து நாள் திட்டம் வாழ்நாள் முழுமைக்கான உங்கள் உறவின் பொறுப்புணர்வை செயல்படுத்த உதவும் ஒரு சுருக்கமான திட்டமாகும்.
More
இந்த அன்பும் திருமணமும் திட்டத்தை வழங்கிய Life.Church க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church குறித்த மற்ற விபரங்களுக்கு www.life.church என்ற அவர்களது இணையதளத்தை பார்க்கவும்.