அன்பும் திருமணமும்மாதிரி

Love and Marriage

5 ல் 2 நாள்

உங்கள் பழைய மனிதனைக் காட்டிலும் இப்போதுள்ள புதிய மனிதன் மேலான வாழ்க்கைத்துணையாக அமைவார் . உங்கள் வளமிக்க திருமண வாழ்விற்கும் கிறிஸ்துவின் குணாதிசயங்களை அணிந்து கொள்வதற்கும் உதவாத பழைய இயல்புகளைக் களைந்து விட இந்த பகுதி உங்களுக்கு சவால் விடுகிறது. இது சட்டையை மாற்றுவது போல எளிதாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையில் நீங்கள் ஒருமித்து சத்தமாக வாசித்து உங்களில் உள்ள ஒரே ஒரு பாவமான குணத்தை களைந்து போட்டு, கர்த்தரின் குணாதிசயங்களை அணிந்து கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். கர்த்தரின் குணாதிசயங்களை அணிந்து கொள்ளத் தவறிவிட்டேன் என்று ஒத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கைத்துணைவரிடம் மன்னிப்புக் கோருங்கள். கர்த்தர் தாமே தினந்தோறும் அவரது குணாதிசயங்களை நீங்கள் அணிந்து கொள்ளத் தக்க மனப்பாங்கை உங்களுக்குத் தரவேண்டுமென்று சேர்ந்து ஜெபியுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Love and Marriage

நமது திருமண வாழ்வை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கர்த்தர் தாமே நமது உறவைக் குறித்த புதிய கருத்துகளை நமக்கு வெளிப்படுத்தவும் நமது உறவை பலப்படுத்தவும் ஏதுவாகிறது. இந்த அன்பும் திருமணமும் வாசிப்புத் திட்டமானது சம்பந்தப்பட்ட வேதபகுதி மூலமாக தினமும் துரிதமாக நம் துணைவருடன் கலந்தாலோசித்து ஜெபம் செய்யும்படியான எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இந்த ஐந்து நாள் திட்டம் வாழ்நாள் முழுமைக்கான உங்கள் உறவின் பொறுப்புணர்வை செயல்படுத்த உதவும் ஒரு சுருக்கமான திட்டமாகும்.

More

இந்த அன்பும் திருமணமும் திட்டத்தை வழங்கிய Life.Church க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church குறித்த மற்ற விபரங்களுக்கு www.life.church என்ற அவர்களது இணையதளத்தை பார்க்கவும்.