இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
சமமற்ற கடன்களை மன்னித்தல்
இந்த இரண்டு பகுதிகளும் ஒரே கதையை விவரிக்கவில்லை என்றாலும், அவை இரண்டும் மன்னிப்பின் ஆற்றலை கையாளுகின்றன. "இந்த இரண்டு பத்திகளிலும், மன்னிப்பின் ஆற்றலைப் பற்றி இயேசு கற்பிக்கிறார். முதல் உவமையில், அதிக மன்னிப்பு தேவைப்படும் ஒருவருக்கு மன்னிப்பின் மதிப்பீடு எவ்வாறு இருக்கும் என்று இயேசு விளக்குகிறார். மற்றொன்றில், இயேசு நம் மீது கொண்ட பெரிய கருணையால், நாம் மற்றவர்களுக்கு மிகுந்த கருணை காட்ட வேண்டும் என்று உணர்த்துகிறார்." கர்த்தர் சிலுவையில் உங்களுக்கு அருளின பாவமன்னிப்பு எவ்வளவு பெரியது என்று நீங்கள் எத்தனை முறை கருதி இருக்கிறீர்கள்? நீங்கள் பாவத்தை குறைக்கிறீர்களா அல்லது அவருடைய பாவமன்னிப்பை பெரிதுபடுத்த முயற்சிக்கிறீர்களா? அவர் மன்னித்ததற்கு அவருக்கு நீங்கள் அடிக்கடி நன்றி செலுத்துகிறீர்களா?
மத்தேயு பகுதி மற்றவர்களை மன்னிப்பதற்கான நமது பொறுப்பையும் அழுத்தமாக பேசுகிறது. 35வது வசனத்தில், நம்முடைய சகோதர சகோதரிகளை நம் இருதயத்திலிருந்து மன்னிக்காவிட்டால், அவர் நம்மை மன்னிக்க மாட்டார் என்று இயேசு எச்சரிக்கிறார்! மன்னிப்பு வழங்குவதற்கு எதிரான எந்தவொரு வாதத்தையும் இந்த சவால் அகற்றும்.
எனவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள் யாரை மன்னிக்க வேண்டியதிருக்கிறது? மனக்கசப்பு, கோபம், தணியாச்சினம் ஆகியவற்றை நீங்கள் யார்மேலாவது வைத்திருக்கிறீர்களா? உன் வாழ்க்கைத்துணை, உன் குழந்தை, பிற குடும்பம், நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் மீதா? நீங்கள் மன்னிப்பு கோர வேண்டிய யாராவது உண்டா? நீங்கள் அநீதி இழைத்திருக்கக்கூடிய யாரிடமாவது உங்களை தாழ்த்தி, அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதிருக்கிறதா?

இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/