ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்மாதிரி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 ல் 5 நாள்

நாள் 5: பிதாவே எங்களை ஒன்றாக்கும்

"அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்". யோவான் 17:21

இயேசு அனைத்து சீடர்களுக்காகவும், எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்காகவும் ஜெபித்தபோது, அவர் ஒற்றுமைக்காக ஜெபித்தது குறிப்பிடத்தக்கது. ஆம், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உடைந்த உறவை மீட்டெடுக்க ஆண்டவர் இயேசுவை பூமிக்கு அனுப்பினார். மற்றவர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வாஞ்சையை கடவுள் மனித குலத்தின் இதயத்தில் வைத்துள்ளார். இந்த ஒற்றுமை பன்மடங்கு ஆற்றலாக மாறி மனித குலத்தை வெற்றியாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் உருமாற்றும். துரதிர்ஷ்டவசமாக, சாத்தான் ஒற்றுமையின் திறனை அறிந்திருந்தான், அன்றிலிருந்து மக்களை பிளவுபடுத்தி இணக்கமின்மையை உண்டாக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறான்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழும்போது, நாம் ஒரு வார்த்தையும் சொல்லாமல், மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகத் தம்முடைய குமாரனை பூமிக்கு அனுப்பிய கடவுளின் அன்பை உலகுக்குச் சொல்ல முடியும். ஒவ்வொரு கணவனும் மனைவியும் ஒருமனப்பாட்டில் வாழும்போது - தேவாலயத்தில் ஒருமனப்பாடு இருக்கும் - தேவாலயம் பல குடும்பங்களைக் கொண்ட அமைப்பாகும். பல சமயங்களில், குடும்பங்களில் ஒருமனப்பாட்டின் ஆவி வீட்டில் குறைவுபடும் போது அது தேவாலயத்தில் பிரச்சனைகளைக் ஏற்படுத்துகிறது. தேவாலயத்தில் நிகழ்பவை பல நேரங்களில் வீட்டில் நடந்து கொண்டு இருப்பதின் பிரதிபலிப்பாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமை தேவாலய ஒற்றுமையாக நிரம்பி வழியும், தேவாலய ஒற்றுமை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துவின் சரீரம் ஒற்றுமையாக நிலைத்து இருக்கும் போது, சுவிசேஷம் வேகமாகவும் எளிதாகவும் பரவும்.

பிதாவும் இயேசுவும் எப்படி ஒன்றாய் இருக்கிறார்களோ, நாமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஜெபம். கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கும்போது, அவர்கள் கடவுளின் ஒருமனப்பாட்டை பிரதிபலிப்பார்கள். ஒன்றாக இருப்பதும் ஒருமனப்பாட்டில் நிலைத்து இருப்பதும் ஆவிக்குரிய வாழ்க்கையாகும். எனவே, பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்வில் இதை செய்ய அனுமதிப்பது நமது கடமை. ஆவியை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது ஒருமனப்பாடு துவங்கும். கணவன்-மனைவி இருவரும் பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கு முழுமையாக அர்ப்பணிக்கும்போது, அவர் நம்மை ஒன்றாக்குவார்.

நாம் எவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவருக்கு அர்ப்பணிக்கிறோமோ, மாம்சமும் உலகமும் மறைந்துவிடும். நாம் எவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து, மாம்சத்தை ஒடுக்குகிறோமோ, அந்தளவுக்கு நாம் இயேசுவைப் போல் ஆகிவிடுவோம். அப்போது ஆண்டவரின் நிபந்தனையற்ற மன்னித்தல், சுயநலமற்ற மற்றும் இரக்கமுள்ள அன்பை உடைந்த உலகிற்கு வெளிப்படுத்த முடியும்.

பரிபூரணமான வாழ்க்கை என்பது இயேசு மற்றும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான ஆட்சிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட திருமணத்தின் விளைவாகும்.

நம் வாழ்வில் சச்சரவை உண்டாக்கும் ஒவ்வொரு தேவையற்ற விஷயத்தை ஒழித்து, ஒருமனப்பட வாஞ்சிக்க வேண்டும். ஆனால் சுயமுயற்சியின் மூலம் அல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையில் வாஞ்சிக்க வேண்டும்.

ஒருமனப்பாட்டை அனுபவிக்கும் ஒவ்வொரு திருமணமும் உடைந்த உலகத்திற்கு ஒரு செய்தியாக மாறும், தேவனால் ஒன்றிணைவது சாத்தியமாகும், மேலும் இயேசுவானவர் காப்பாற்றவும், குணப்படுத்தவும் மற்றும் பிரச்சனைகள் கொண்ட திருமணங்களை மீட்டெடுக்கவும் முடியும்.

நம் திருமணம் தேவனுடைய கையில் ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதமாக மாறும். தேவனோடும் நம் துணையோடும் ஒன்றாக இருக்க வாஞ்சிப்போம், நம் ஒற்றுமையான வாழ்க்கையின் மூலம் தேவன் அவருடைய நோக்கங்களை நிறைவேற்றட்டும்.

ஜெபம்: அன்பான பிதாவே, நாங்கள் இயேசுவின் ஜெபத்தை ஜெபிக்க விரும்புகிறோம், பிதாவே உமது குமாரனை நீர் அனுப்பினீர் என்பதை உலகம் அறியும்படி எங்களை ஒன்றாக ஆக்குங்கள். இந்த உடைந்த மற்றும் இருண்ட உலகத்திற்கு எங்கள் வாழ்க்கை உமது அன்பையும், உமது மகிமையையும் காட்டட்டும். இயேசுவின் நாமத்தில் ஆமென்

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sourceformarriage.org