ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்மாதிரி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 ல் 3 நாள்

நாள்3: ஒன்றாக நடப்பதற்கு ஒருமனப்படு

" இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ? "ஆமோஸ் 3:3

நாம் ஒருமனப்பட்டதினாலே மாத்திரம் நாம் திருமணமாகியிருக்கிறோம், ஒருமனப்படுதல் திருமணத்தின் அடித்தளம். தேவனுடையசந்நிதியில்நாம் ‘ஆம்’ என்றும், ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொன்னோம். அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது! நாம் இப்போது ஒரே மனதுடன் நடப்பதேஇல்லை. நாம்ஒருமனப்பட முடியாமல் சிரமப்படும் நிலையில் உள்ளோம். ஒருமனப்படாவிட்டால், நாம் ஒரே குடையில் வாழ முடியாது.

சிலர்நாங்கள் ‘வேறுபட்டசிந்தனைஉள்ளவர்கள்’ என்றும், ‘பொருந்தாதவர்கள்’ என்றும், ‘ஒருமனப்பட்டுநடப்பதற்குவழியேஇல்லை’ என்றும்கூறுவர். அத்தகையதம்பதியர்இப்படிப்பட்டகாரணங்களுக்காகவிவாகரத்துமுடிவைஎடுக்கிறார்கள் (வேறுபலகாரணங்களுக்காக). அறிய வேண்டிய நல்ல செய்தி என்னவெனில், நம்மை ஒரே மாம்சமாக்குவதுதேவனுக்கே உரியது. மத்தேயு 19:6ல், இயேசு மிகத் தெளிவாகக் கூறுகிறார்: "ஆதலால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்".

ஒருமனப்படுதல் என்பது ஒன்றாக ஆவதற்கான வல்லமை என்று நாம் நம்புகிறோம். ஒருமனப்படுதல் என்பது நாம் ஒருவருக்கொருவர் உடன்படுவதற்கு முன்பு கர்த்தருக்கும் அவருடைய வார்த்தைக்கும் தனித்தனியாக ஒருமனப்படுவதாகும். இதன் பொருள் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும்; தேவன் முக்கிய பங்கு வகிக்கிறார்.

எனவே, தேவனுடன் ஐக்கியம் கொள்வதை பழக்கப்படுத்துவது இன்றியமையாதது.ஐக்கியம் என்பது பேசுவதையும் , கேட்பதையும் உள்ளடக்கியதாக இருக்கும். தனிப்பட்டமுறையிலும், தம்பதியாகவும் தேவனுக்குசெவிகொடுப்பது முக்கியம். இதனால் ஒருமனப்படுதல் எளிதாகிவிடும்.

தேவன் ஒருவரிடம் ஒரு கருத்தையும் மற்றவரிடம் வேறொரு கருத்தையும் சொல்லமாட்டார். அவர் ஒருபோதும் குழப்பத்தை ஏற்படுத்தமாட்டார். வேறுபட்ட பதில்கள் கிடைத்தால், நம்மில் ஒருவர் தேவனின் வார்த்தையை கேட்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒன்றாக ஒருமனப்பட்டு நடப்பது வாழ்க்கையின் முழு நீண்ட பயணமாகும்.

தவறான காரணங்களுக்காக ஒருமனப்படாதீர்:

நாம் அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம், அனனியா, தன் மனைவி அறியும்படி, கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை மறைத்து, அதன் மற்றொரு பகுதியை மட்டும் காணிக்கையாக அளிக்கிறார். பேதுரு அவரிடம் கேட்கும்போது, அவர் பொய்யாகப் பதில் அளித்ததால், உடனே அவர் கீழே விழுந்து இறந்தார். இச்சம்பவத்தில் சப்பிராள் அமைதியானபார்வையாளராகஇருந்தார் – அவள் தன் கணவன் ஏமாற்றுவதை தடுத்து இருந்திருக்கலாம். ஆனால் வருத்தத்துக்குரியது என்னவென்றால், அவளும் அதே பொய்சொல்ல ஒருமனபட்டாள். இதன் விளைவாக அவளும் தனது உயிரைக் காத்துக்கொள்ளவில்லை. பேதுரு ஒரு முக்கியமான கேள்வியைச் சுட்டிக்காட்டுகிறார்: "கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனபட்டதென்ன?" (அப்போஸ்தலருடையநடபடிகள் 5:9). வாழ்க்கையின் ஆவிக்குரிய விஷயங்களில் பொய்களைப் பேசுவதற்கு ஒருமனப்படுவது நாம் தேவனின் ஆவியை சோதிப்பதாகும். தேவனின் வார்த்தை நம்மை தெளிவாக எச்சரிக்கிறது: "நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக." (உபாகமம் 6:16).

நாம் தவறான அல்லது தேவையற்ற ஏதேனும் ஒன்றைச் செய்யத் தீர்மானிக்கும்போது –தம்பதியரில் ஒருவர், கணவனாவதுஅல்லதுமனைவியாவது எழுந்து அதை தடுக்க வேண்டும். நாபாலின் முட்டாள்தனமான நடத்தைக்கு அபிகாயில் தனது கணவருக்கு உடன்படாமலிருந்தாள். அவள் தாவீது ராஜாவை சமாதானப்படுத்தி, தன் உயிரையும் அவளுக்குச் சொந்தமான அனைத்தையும் காப்பாற்றினாள் (1 சாமுவேல் 25).

கணவன் மற்றும் மனைவியாக, நமது ஆவிகள் தேவனோடு இணைந்திருக்கும் போது, ​​நமது ஆத்துமாவும் (மனம், விருப்பம் மற்றும் உணர்ச்சிகள்) ஒருமனப்பாட்டை அனுபவிக்கும். நாமும் ஒரே எண்ணத்தோடு இருப்போம், அதே நேரம் நாம் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை. ஆனால் தேவனுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற, நாம் ஒன்றிணைவோம். விரைவில் நாம் ஒற்றுமையாக ஒன்றிணைவோம்

ஒவ்வொரு முறையும் நாம் கணவன் மனைவியாக ஒருமனப்படும் போது, நம் ஒற்றுமை பலமாகிறது, நாம் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கிற நம்பிக்கையும் பலமாகிறது, மேலும் நம் விசுவாசமும் வலுவடைகிறது. ஒருமனப்படுதல்சண்டையின் ஆவியை அகற்றி, தேவனுடைய சமாதானத்தை வரவேற்கிறது. குழந்தைகள் இந்த சூழ்நிலையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

ஒருமனப்படுதல்ஒற்றுமையை உருவாக்குகிறது!

ஜெபம்: அன்புள்ள பிதாவே, கணவன் மனைவியாக எங்கள் வாழ்க்கையில் ஒன்றாக நடக்க நாங்கள் ஒருமனப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அங்கீகரிக்கும் விஷயங்களுக்கு மட்டும் நாங்கள் ஒருமனப்படுவதற்கு, உங்கள் வார்த்தையைப் படித்து தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யுங்கள். உமக்கு அதிருப்தி தரும் எதையும் தைரியமாக எதிர்த்து நிற்க எங்களுக்கு உதவுங்கள். ஒருமனப்படுதல் எங்கள் உறவில் ஒற்றுமையை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இயேசுவின் நாமத்தில் ஆமென்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sourceformarriage.org