ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்மாதிரி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 ல் 4 நாள்

நாள் 4: ஒருமனப்படுதல்-ஒரு யுத்த ஆயுதம்

"அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்". மத்தேயு 18:19

தேவன் நம்முடைய ஜெபத்தில் நாம் ஒருமனப்பட்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.ஒருமனப்படுதல் ஜெபத்திற்கு பதில்களைத் திறக்கிறது. ஒன்றிணைந்து ஜெபிக்க வேண்டிய அடிப்படையான தகுதி ஒருமனப்படுதலாகும். நாம் ஒருமனப்படுதலின் மூலம் நம் ஜெபங்கள் வலிமை வாய்ந்தவையாக மாறும். தேவன், ஒன்று பட்டிருப்பதை பார்த்து, அவர் சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப நம் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார்.

கணவன் மற்றும் மனைவி ஏதோ ஒரு விஷயத்தில் ஒருமனப்பட்டு அதை ஜெபத்தில் தேவனிடம் எடுத்துச் சென்றவுடன், சாத்தான் தனது நிலையையும் மற்றும் அந்த விஷயத்தில் அவன் தனது அதிகாரத்தையும் இழக்கிறான். அவன் விலகி விடுவான். கணவன் மற்றும் மனைவி ஒருமனப் படுகையில் சாத்தான் தனது கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் இழக்கிறான். கணவனும் மனைவியும் கடவுளின் விருப்பத்திற்கு இணங்க ஏதாவது ஒன்றைப் பற்றி ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது ஒரு வல்லமை வெளிப்படுகிறது - மேலும் கடவுளின் சித்தம் பரலோகத்தில் இருப்பதைப் போல நிலைநிறுத்தப்படும். ஆதலால், கணவனும் மனைவியும் ஒருமனப்படுதலை ஆவிக்குரிய யுத்த ஆயுதமாக பயன்படுத்தி யுத்தத்தில் வெற்றி பெறலாம்.

ஒருமனப்பாட்டில் இருப்பதின் அவசியத்தில் நாம் கவனமாக இருக்கும் போது, அதுவே ஒரு வாழ்க்கை முறையாக மாறும். நாம் ஒன்றாக ஜெபிக்கத் தொடங்குவதற்கு முன் நமக்கு ஒருமனப்பாடு தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள் - ஆனால் உண்மையில், ஒன்றாக ஜெபிப்பது நமக்குள் ஒருமனப்பாட்டை ஏற்படுத்துகிறது. ஒரு குடும்பமாக இணைந்து ஒருமனப்பட்டு ஜெபிக்கும் போது ஒரு பிணைப்பையும், குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிக்க வேண்டிய பொறுப்புணர்வையும் கொண்டுவரும்.

நாம் வேதாகமத்தில் எடுத்துக்காட்டுகளைக் காணலாம். நோவாவின் மனைவி, மழை மற்றும் பேழை பற்றிய நோவாவின் வார்த்தைகளில் ஒருமனப்பட்டாள். நோவாவின் மனைவி ஒருமனப்பட்டபோது, அவரது மூன்று மகன்களும் அவர்களுடைய மனைவிகளும் ஒருமனப்பட்டார்கள். மொத்த மனித குலமும் பெரிய வெள்ளத்தில் அழிந்து போயிற்று, ஆனால் நோவாவின் முழுக்குடும்பமோ காப்பாற்றப்பட்டார்கள்.

கெத்சேமனேயின் தோட்டத்தில் இயேசு, தம்முடன் தமது சீஷர்கள் ஜெபத்தில் ஒருமனப்பட வேண்டும் என்று விரும்பினார்."நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? - என்றார்".

மத்தேயு 26:40. ஆரோனும் மற்றும் ஊரும் மோசேயுடன் ஒருமனப்பட்டு, அவரது கைகளை உயர்த்தினர், இதனால் யோசுவா போரில் வெற்றி பெற்றதைக் கண்டனர். (யாத்திராகமம் 17:12-14)

தேவன் சில சமயங்களில் மனைவியிடமோ அல்லது கணவனிடமோ பேசலாம், தங்கள் துணை கடவுளோடு நடப்பதை குறித்து உறுதிப்படுத்தியுள்ளபோது, அவர்கள் உடனடியாக ஒருமனப்பட்டு, தேவனின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

திருமணத்தையும் குடும்பத்தையும் தொடர்ந்து அழிக்க முயற்சிக்கும் எதிரியை ஆவிக்குரிய போரில் எதிர்த்து வெற்றி பெற, தினந்தோறும் ஒருமனப்படுதல் விரைவில் நம்மை ஆயத்தப்படுத்தும்.

எதிரி கொண்டு வருகிற ஒவ்வொரு போரிலும் வெற்றியடைய, ஒருமனப்பாட்டுடன் கூடிய ஜெபத்தின் மூலம், தேவன் எல்லா தம்பதிகளையும் மற்றும் குடும்பங்களையும் ஆயத்தப்படுத்துவாராக.

ஜெபம்: அன்புள்ள பிதாவே, நாங்கள் ஒருமனப்பட்டு இணைந்து ஜெபிக்க உதவிசெய்யுங்கள். ஜெபத்தில் ஒருமனப்பாட்டின் வல்லமையை நாங்கள் அனுபவிக்கச் செய்யுங்கள். இயேசுவின் நாமத்தில் எங்களுக்கு ஒருமனப்பாட்டின் ஆவியைத்தந்து ஆசீர்வதியுங்கள். ஆமேன்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sourceformarriage.org