ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்மாதிரி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 ல் 1 நாள்

அறிமுகம்

"தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்." (ஆதியாகமம் 2:24).

திருமணத்திற்கு அடிப்படை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாடு என்பதை ஆண்டவருடைய வார்த்தை முக்கியத்துவம் அளிக்கிறது. குறிப்பிடப்பட்ட வசனங்களில் காணப்படுவதுபோல், இந்த ஒற்றுமையை அடைவது மனிதனின் முயற்சியால் அல்ல. இது தேவனின் செயல் ஆகும். ஆகையால், தேவன் நமக்குள் ஒருமனத்தை உருவாக்க அனுமதிக்க வேண்டும். ஆணும்பெண்ணும் தாங்கள் முயற்சித்தாலும் ஒருவராக மாற முடியாது. இக்கால உரையாடல்கள் பெரும்பாலும் இந்த ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் உத்திகளை மையமாக சுற்றியுள்ளன. ஆனால்,மாம்சத்தாலோ, மனிதனாலோ,உலகரீதியானஞானத்தாலோ அல்ல, பரிசுத்த ஆவியானவராலும் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையின் ஊக்கத்தாலும் தேவையான திறன்களை அடைய வேண்டும்.

நாள் 1 : விட்டு இசைதல்

இந்த காரணத்திற்காக, 'ஒரு மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்திருப்பான்;அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்'. (ஆதியாகமம் 2:24 )

தேவன் ஏவாளைப் படைத்து ஆதாமுக்குக்கொடுத்தபோது செய்த அறிவிப்பே மேற்கண்ட வசனம். ஏவாளை முதன்முதலாகப் பார்த்தபோது ஆதாம் கூறிய பதில் உதாரணமாக இருந்தது. அப்பொழுது ஆதாம் : "இவள் என் எலும்பில் எலும்பும் ,என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்.(ஆதியாகமம் 2:23). கர்த்தர் "இருவரும் ஒரேசிந்தையுடையவராய் செயல்படுவது" பற்றி பேசினார்.

ஒன்றாக ஆவதற்கு,' மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியுடன்இசைந்திருக்க வேண்டும். ஆதாமுக்கு பெற்றோர் இல்லை என்றாலும், தேவன் அதை முழு மனித குலத்திற்கும் ஒரு ஆணையாகக் கட்டளையிட்டார். இது முதன்மையாக மனிதனுக்குரியது. இதை மட்டும் புரிந்துகொண்டு கீழ்ப்படிந்தால், "ஒன்றாக மாறுவதற்கு நாம் முதல் படியை எடுத்து வைத்தாயிற்று".

விட்டு விடுதல் என்றால், மனிதன் தனது திருமண உறவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதாவது, அவன் தனதுபெற்றோரை உணர்ச்சி ரீதியாகவோ, நிதி சார்ந்தோ அல்லது மற்ற எந்த தேவைக்காகவும்சார்ந்திருக்கக் கூடாது. விட்டுவிடுவது என்பது அவரது பெற்றோர் அவ்வபோது கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் அறிவுருத்துதல் போன்றவற்றிற்கு அவர் இனி கட்டுப்படுவதில்லை என்பதாகும்.

ஆண்டவர் கூறுவதின் படி விட்டு விடுதல் என்பது அவர் தனது பெற்றோருக்குப் பயப்படாமல் ,அவரும் அவரது மனைவியும் சுதந்திரமாக தங்களது முடிவுகளை எடுக்கவும் , கர்த்தருடைய ஞானத்துடனும், மனைவியின் அறிவுரையுடனும் தனது குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்பதாகும் .

மாறாக விட்டு விடுதலின் அர்த்தம் (அ) பொருள், ஒருவருடைய பெற்றோருக்கு நம்முடைய உதவி தேவைப்படும்போது அவர்களை கைவிட்டு விடுதல் அல்ல.இந்த விஷயத்தில் ஒன்றுபட்டால், அவர்கள் தங்கள் பெற்றோருக்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பார்கள். நம் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை நமக்கு அறிவுறுத்துகிறது, நிச்சயமாக நாம் அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.ஆனால் எங்களின் முதன்மை உறவான திருமணத்தை விட்டு விடக் கூடாது.

ஒரு மனிதன் தனது பெற்றோரை விட்டு வெளியேறும்போது, கணவன் தன் மனைவியிடம் எதிர்ப்பார்ப்பது "குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு." (சங்கீதம் 45:10). மனிதன் இந்த நடவடிக்கை எடுக்கும்போது அந்தப் பெண் பாதுகாப்பாக இருப்பாள். தன் பெற்றோரைவிட்டுவிட்டு தன் கணவனுடன் இசைந்திருப்பதை எளிதாகக் காண்பாள். ஆனால் ஒரு பெண் தன் கணவன் அவரது பெற்றோரைச் சார்ந்து இருப்பதைக் கண்டால், அவள் அவரை நம்புவது கடினம், அதனால் அவள் மெதுவாக தன் பெற்றோரின் மீது சாய்ந்து கொள்ளத் தொடங்குகிறாள்

ஒரு ஆணாக, கணவன் தேவன் அவரை ஆசீர்வதித்த புதிய குடும்பத்தை கவனித்துக் கொள்ள கணவன் எழுந்திருக்க அழைக்கப்படுகிறான். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் தேவைகளை சந்திப்பவராகவும், ஆசாரியனாகவும், பாதுகாவலராகவும் உயர வேண்டும்.

எனவே, விட்டு இசைவதும் ஒருமனப்பாட்டைநோக்கிய முதல் படியாகும். ஒவ்வொரு திருமணமான தம்பதியரும் இதைச் செய்ய ஆண்டவர்உதவுவாராக.

ஜெபம்: அன்பான தந்தையே, கர்த்தர் கொடுத்த ஒருமைப்பாட்டைஅனுபவிப்பதற்காக கணவன்-மனைவியாக எங்கள் பெற்றோரை விட்டுவிட்டு ஒன்றாக இசைந்திருக்க எங்களுக்கு உதவுங்கள். எங்கள் திருமணப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க எங்களுக்கு உதவுங்கள். எங்களையும் எங்கள் பெற்றோர் இருவருக்கும் ஆசீர்வாதமாக மாற்றுங்கள். இயேசுவின் நாமத்தில் ஆமென்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sourceformarriage.org