சங்கீதம் 23மாதிரி

சங்கீதம் 23

12 ல் 9 நாள்

பந்தி ஆயத்தமாயிற்று

“என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி" (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 23:5ஐ பார்க்கவும்)

ஒரு நாள், “கர்த்தர் சாத்தானை நோக்கி: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ?” என்று கேட்டார் (பரிசுத்த வேதாகமத்தில் யோபு 1:8ஐ பார்க்கவும்)

யோபு தேவனுடைய பிள்ளையாகவும், உத்தமனாகவும், சன்மார்க்கனாகவும், கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகுகிறவனாகவும் இருந்ததால், தேவன் யோபுவின் நிமித்தம் பெருமிதம் கொண்டார்.

சாத்தான் பொறாமையடைந்தவனாய், கோபத்துடன் யோபுவை பயங்கரமாக சோதித்தான்; சரீர ஆரோக்கியம் முதற்கொண்டு அவனிடமிருந்த எல்லாவற்றையும் அவன் பறித்துவிட்டான்.

ஆனால் யோபுவை தேவன் மீட்டுக்கொண்ட பின்பு, அவனது குடும்பத்தையும், பொருட்களையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் ஆண்டவர் திரளாய் பெருகச் செய்தார்.

தேவன் எதிராளியாகிய பிசாசைப் பார்த்து, "சகோதரர் மீது கடுமையாய் குற்றஞ்சாட்டுகிற பிசாசே, நீ தோற்றுப் போனாய்! எனது பிள்ளையாகிய யோபு ஜெயித்துவிட்டான், உன் கண்களுக்கு முன்பாக யோபுவிற்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்திவிட்டேன், அவனை எப்படி ஆசீர்வதிக்கிறேன் என்பதைப் பார்" என்று சொல்லியிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.

தேவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கவே விரும்புகிறார் என்று நான் என் முழு மனதோடு விசுவாசிக்கிறேன். அவர் நம்மை மீட்கவும், நம்மை ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார். குறிப்பாக இதை வாசித்துக் கொண்டிருக்கிற உன்னை அவ்வாறே ஆசீர்வதிக்க விரும்புகிறார்.

ஆம், உனது சத்துருக்களுக்கு முன்பாக உனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறார். உனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவது தேவனாக இருக்கும்பொழுது, நீ எல்லா ஆபத்துக்கும் விலகி இருப்பது மாத்திரமல்ல, நீ ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுகிறாய்!

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 23

சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm23