சங்கீதம் 23மாதிரி

சங்கீதம் 23

12 ல் 7 நாள்

பயப்படாதே!

“நான் ... பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வேதாகமத்தில் சங்கீதம் 23:4ஐ பார்க்கவும்)

இன்று, கர்த்தர் உன் கவலையை விட்டுவிடுமாறு சொல்கிறார்.

உனக்கு உதவி செய்து, உன்னைத் தூக்கி நிறுத்துவதாக உறுதியளிக்கிறார்.

அவர் உன் கூட இருக்கிறார்!

உன்னிடத்தில் பேசி, உனக்கு சொல்கிறார், "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்"(வேதாகமத்தில் ஏசாயா 41:10ஐ பார்க்கவும்)

நீ ஜெபிக்கும்போது, "பயப்படாதே!" என்று சொல்வதற்காக தேவன் உன் அருகில் வருகிறார்.

“நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.” வேதாகமத்தில், புலம்பல் 3:57ஐ பார்க்கவும்)

என்னோடு சேர்ந்து இதை அறிக்கையிடு: "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (வேதாகமத்தில் சங்கீதம் 118:6ஐ பார்க்கவும்)

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 23

சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm23