சங்கீதம் 23மாதிரி
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வாக்குத்தத்தம் உண்டு
"ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்."
(பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 23:6)
இயேசு உனக்கும் உன் வாழ்விற்கும் நன்மை செய்வதையே விரும்புகின்றார். அவர் உன்னை ஆசீர்வதிக்கவும், நிரப்பவும், மகிழ்ந்து களிகூரப்பண்ணவும், வாழ்வில் வெற்றிபெறச் செய்யவும் விரும்புகிறார்….
இயேசு அவருடைய இரக்கத்தை உன் வாழ்விலும், உன் மூலமாக பிறர் வாழ்விலும் காண்பிக்க விரும்புகின்றார்…
நீ பிறர் வாழ்வில் இரக்கம் காட்டவும், அவர்களை மன்னிக்கவும், இயேசுவின் ஜீவனையும், சமாதானத்தையும் அவர்கள் வாழ்வில் ஊடுருவச் செய்யவும் அவர் உனக்கு உதவிபுரிகிறார்.
- நீ கர்த்தரால் அழைக்கப்பட்டு, அவரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், நன்மை உனக்குரிய வாக்குத்தத்தமாய் இருக்கிறது. எனவே உனக்கு நன்மை பயக்கவே, எல்லாக் காரியங்களும் ஒன்றாக செயல்படுகின்றன: "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (பரிசுத்த வேதாகமத்தில் ரோமர் 8:28ஐ பார்க்கவும்)
- தேவன் உன்னிடம் காண்பித்த இரக்கத்தை நீ பிறரிடம் காண்பித்து அந்த இரக்கத்தை பெருகச் செய்யும்போது, தேவன் உன்னையும் ஆசீர்வதிப்பார். "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்."(பரிசுத்த வேதாகமம், மத்தேயு 5:7)
"நிச்சயமாகவே உன் வாழ்நாள் முழுவதும் நன்மையும் கிருபையும் உன்னைத் தொடரும்.”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm23