சங்கீதம் 23மாதிரி
அவர் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்
“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி...” (வேதாகமத்தில் சங்கீதம் 23:3ஐப் பார்க்கவும்)
ஒரு வசனத்தின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, பல்வேறு மொழி பெயர்ப்புகளை வாசிப்பது பலனுள்ளதாயிருக்கும்.
“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி” என்பதன் சில மொழி பெயர்ப்புகள்:
“என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்." (TAERV பரிசுத்த வேதாகமம் இலகுத் தமிழ் மொழிபெயர்ப்பு)
புது வலிமை: உன் வாழ்க்கைப் போராட்டத்தினை போராடி வெல்ல கர்த்தர் புது வலிமையை, தமது வலிமையைத் தருவாராக.
“அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்." (TCVIN இந்திய சமகால மொழிபெயர்ப்பு)
புத்துயிர்: கர்த்தர் தாமே உனது ஆவியை, ஆத்துமாவை புதிதாக்குவாராக.
“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி" (TAOVBSI பரிசுத்த வேதாகமம்)
ஆத்துமாவைத் தேற்றி: கர்த்தரே நல்ல மேய்ப்பராய் இருந்து உன் காயங்களை ஆற்றித் தேற்றுவாராக. உன்னைத் தேற்றி மீண்டும் நிலைநிறுத்துவாராக.
ஆம், கர்த்தர் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்! இந்த நொடி அவர் உன் வாழ்வில் அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்.
ஆவியானவர் உனக்காக கிரியை செய்கிறார்: செயல் திறனைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில், மன அழுத்தத்தில் வாழ்ந்து போராடிக்கொண்டிருக்கும் உலகத்தில், தேவனைத் தேட எளிதில் மறந்துவிடுகிறோம். "நேரமே இல்லை!" ஆனால் இன்று நம்பிக்கையின் அடி ஒன்றை எடுத்து வை. அவசர உலகம் உன்னைப் பற்றிப் பிடிக்கும் முன் தேவ சமுகத்தில் மூச்சை இழுத்து விட்டு சற்றே இளைப்பாறிடு.
ஆவியானவர் உன்னை சந்திப்பார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm23