கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்மாதிரி
நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாரத்தை தள்ளிவிட்டு, இந்த நொடியில் முழுமையாக வாழ்வது கடினமாக இருக்கும். இந்நாளிலும், இன்று நம்மிடம் இருப்பதிலும், இருப்பதை யாருடன் இன்று அனுபவிப்பதிலும், வெறுமனே மகிழ்வது கடினம். நம் கவனத்திற்கு பல கோரிக்கைகள், நம் அட்டவணைகளின் மேல் கோரிக்கைகள் மற்றும் நமது மன ஆற்றலின் மேல் கோரிக்கைகள் உள்ளன. சில நேரங்களில் இந்நாளில் கவனம் செலுத்த இயலாது போல் உணர்கிறது, ஏனென்றால் நாளைய தினம் ஏற்கனவே நம்மை இழுத்துச் செல்கிறது.
இயேசு நம்மிடம் தீவிரமான ஒன்றைச் செய்யும்படி சொன்னார். நாளைய தினத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். அன்றன்றைக்குரிய சிக்கலை மட்டும் சமாளிக்க அவர் நம்மை சித்தப்படுத்துவேன் என்று மத்தேயு 6:34-ல் அவர் கூறுகிறார்-நாளை, அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் அல்ல, இன்று.
சில நாட்களில் இது மற்ற நாட்களை விட கடினமானது. “நாளை” ஒரு நிதானமான சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும்போது நாளைய தினத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பது எனக்கு எளிதானது. ஆனால் "நாளை" அந்த பெரிய சந்திப்பு (அல்லது பல் மருத்துவரை சந்தித்தல்!) இருக்கும்போது அது மிகவும் கடினமாகிவிடும்.
நாளைப் பற்றி நாம் கவலைப்பட்டு, அது எதைக் கொண்டு வரக்கூடும் என்று நாம் நினைப்போமானால், உண்மையில் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம், அது நம்முடையது அல்ல. நாம் நம்முடன் நேர்மையாக இருப்போமானால், நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. இன்று என்ன நடக்கப் போகிறது என்பதும் நமக்குத் தெரியாது! இருப்பினும், இந்த் நாளைக் கட்டுப்படுத்துபவரை நாம் அறிந்து கொள்ளலாம். மற்றும் நாளை. மற்றும் என்றென்றும்.
அந்த உண்மையில் ஓய்வெடுக்க இன்று சிறிது நேரம் ஒதுக்குங்கள். இன்றும் நாளையும் கடவுளின் கைகளில் இருப்பதை அறிந்து இந்த தருணத்தை, இந்த நாளை அனுபவியுங்கள். அவருடைய அமைதி “இந்த நாளை” அர்த்தமுள்ளதாக்கட்டும்.
கேசி கேச்
YouVersion ஆதரவின் தலைவர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.
More