கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்மாதிரி

7 Things The Bible Says About Anxiety

7 ல் 3 நாள்

கவலை கணிக்க முடியாததாக உணர முடியும். ஒரு நிமிடம் நன்றாக இருக்கிறது. அடுத்தது, நீங்கள் பலவீனப்படுத்தும் உணர்ச்சி மற்றும் மன குழப்ப அலையால் அடித்துச் செல்லப்படுகிறீர்கள். நீங்கள் ஆழ்ந்த மூச்சு விடுகிறீர்கள். உங்கள் கண்களை மூடி. பதட்டத்தால் தாக்கப்படும்போது நீங்கள் செய்யக் கற்றுத்தரபட்ட அமைதிப்படுத்தும் உடல் எதிர்ச்செயல்களை பயிற்சி செய்கிறீர்கள். ஆனால் கவலை நம்மை உடல் ரீதியாக மட்டும் பாதிப்பதில்லை. அது எல்லாவற்றையும் பாதிக்கிறது.

அதனால்தான், நம்முடைய கவனத்தை மாற்ற உதவும் ஆன்மீக சத்தியங்களை நமது உடல் ரீதியான எதிர்ச்செயல்களுடன் நாம் இணைத்து கொள்ள வேண்டும். நம் மனம் ஓய்வெடுக்க வேண்டும். நம் இதயங்களை மீண்டும் அளவீடு செய்து சரி செய்யவும் அமைதிப்படுத்தவும் வேதம் உதவுகிறது.

முதலாவதாக, நாம் சரியான மனநிலையில் இருக்கும்போதே வேதவசனங்களுடன் நம்மை ஏந்திக் கொள்ள வேண்டும், இதனால் தாக்குதல் வரும்போது, நாம் போராடத் தயாராக இருக்கிறோம். பதட்டத்தின் அலைகள் தாக்கும்போது நீங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய வேதங்களை மனப்பாடம் செய்யுங்கள். அந்த வசனங்கள் கடவுளைப் பற்றிய உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றன, மேலும் இருண்ட இடங்களுக்கு நம்மை இழுத்து செல்வதிலிருந்து நம் கண்களை விலக்குகின்றன..

ஏசாயா 12: 2, நம்மைக் காப்பாற்றுவதற்காக கடவுளை நம்பலாம் என்றும், நாம் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்கிறது. அது எவ்வளவு சக்தி வாய்ந்தது? நாம் பயப்பட வேண்டியதில்லை. நாம் கடவுளை நம்பலாம். அவர் நம்மைக் காப்பாற்றுவார். அவர் கர்த்தர். அவர் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறார், நாம் எவ்வளவு தூரம் போய்விட்டோம் என்று நினைத்தாலும், அவரால் நம்மை மீட்க முடியும். அவர் அங்கே இருக்கிறார்.

இதுபோன்ற அறிக்கைகளால் நம் மனதை நிரப்பும்போது, நம்முடைய சுமை நிறைந்த இருதயங்களிலிருந்து சுமைகளை எடுத்து, நமக்கு ஓய்வு அளிக்க கடவுளுக்கு அனுமதி அளிக்கிறோம். இந்த அறிக்கைகள் நாம் எதிர்த்துப் போரிடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் சக்தியைத் தருகின்றன.

பதட்டத்தின் அலைகள் நீங்கின என்று நீங்கள் உணரும் வரை இந்த உண்மைகளை மீண்டும் மீண்டும் உங்கள் உதடுகளால் அறிக்கையிடுங்கள், ஏனென்றால் உண்மையை மீண்டும் சொல்வது பதட்டத்தின் பொய்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

கடவுள் நம்மிடமிருந்து இந்த வகையான சார்புநிலையை விரும்புகிறார். அவருடைய வார்த்தையை தியானிக்க ஒரு அதிர்ச்சிகரமான மனப் போருக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. என் மனம் வேதத்தின் சத்தியத்தில் கவனம் செலுத்தும்போது, ஒரு முறை என்னை மூழ்கடித்த தூண்டுதல்கள் குறைந்த சக்தியைக் கொண்டவை என்று நம்புகிறேன் (ரோமர் 8: 6 ஐப் பார்க்கவும்).

அவருடைய வார்த்தையின் மூலம் கடவுளிடம் செல்லுங்கள். அது உங்கள் எண்ணங்களை ஆட்கொண்டு, உங்கள் ஆத்மாவின் ஆழத்தில் உள்ள கவலையை சரி செய்யட்டும். உங்கள் பயத்தை அவரிடம் கொடுக்கத் தீர்மாணியுங்கள். உங்களை காப்பாற்ற அவரை நம்புங்கள்.

ஜெசிகா பெனிக்
YouVersion உள்ளடக்க மேலாளர்

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

7 Things The Bible Says About Anxiety

ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.

More

இந்த திட்டம் YouVersion குழுவால் எழுதி, வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு youversion.com ஐப் பார்வையிடவும்.