கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்மாதிரி

7 Things The Bible Says About Anxiety

7 ல் 4 நாள்

ரோமர் புத்தகத்தில், பவுல் நீங்கள் இயேசுவை உங்கள் இறைவன் மற்றும் இரட்சகராக ஒப்புக்கொண்ட தருணத்தில், நீங்கள் கடவுளின் குடும்பத்தில் தத்தெடுக்கப்படுகிறீர்கள், அவர் உங்கள் தந்தையாகிறார் என்று கூறுகிறார். கடவுள் சாதாரண தந்தை இல்லை. உங்கள் பூமிக்குரிய தந்தை மனிதர் மற்றும் பாவமுள்ளவர், அதாவது அவர் உங்களை கடந்த காலங்களில் ஆதரிக்கத் தவறியிருக்கிறார்…மேலும் எதிர்காலத்தில் அவர் உங்களை ஆதரிக்கத் தவறுவார்.

கடவுள் பரிபூரணர், நல்லவர். அவர் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். செப்பனியா 3:17 உங்கள் பரலோகத் தகப்பன் உங்கள் மேல் வைத்துள்ள நம்பமுடியாத அன்பை விவரிக்கிறது: அவர் உங்களுடன் இருக்கிறார், அவர் உங்களிடத்தில் மகிழ்ச்சியடைகிறார், அவர் உங்களைப் பற்றி சந்தோஷப்படுகிறார்! கடவுள் உங்கள் பாதுகாவலரும் உங்களுக்கு ஆறுதலளிப்பவரும் என்று செப்பனியா கூறுகிறார். "அவருடைய அன்பினால், அவர் உங்கள் எல்லா அச்சங்களையும் அமைதிப்படுத்துவார்."

139-ஆம் சங்கீதம், நீங்கள் முதலில் உங்கள் தாயின் வயிற்றில் வளரத் தொடங்கியதிலிருந்து கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்றும் நீங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்களுடன் இருப்பார் என்றும் கூறுகிறது. நீங்கள் அவருடைய படைப்பின் தலைசிறந்த படைப்பு, அவர் உங்களை உருவாக்கிய நோக்கமனைத்தையும் நீங்கள் கண்டுபிடித்து வாழும்வேளையில் அவர் உங்கள் மிகப்பெரிய ஆதரவாளராயிருக்கிறார்.

இதைக் கவனியுங்கள்: ஒரு குழந்தை படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறது, அதே நேரத்தில் ஒரு இடியுடன் கூடிய மழை தீவிரமடைகிறது. மின்னல் மற்றும் இடியின் திடீர் முழக்கம் குழந்தையை தூக்கத்திலிருந்து திடுக்கிடச் செய்கிறது, உதவிக்கான ஒரு அழுகைக்குப் பிறகு, அன்பான தந்தை விரைந்து வந்து குழந்தையைச் சுற்றி கைகளை மூடிக்கொள்கிறார். அந்த தகப்பனைப் போலவே, கர்த்தர் எப்போதும் உங்களுக்காக இருக்கிறார். அவருடைய அன்பில், அவர் உங்கள் எல்லா அச்சங்களையும் அமைதிப்படுத்துவார்.

கைலின் ஹெர்சாக்
YouVersion Android பொறியாளர்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

7 Things The Bible Says About Anxiety

ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.

More

இந்த திட்டம் YouVersion குழுவால் எழுதி, வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு youversion.com ஐப் பார்வையிடவும்.