கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்மாதிரி

7 Things The Bible Says About Anxiety

7 ல் 6 நாள்

வாழ்க்கையில், உங்களுக்கு உபத்திரவம் உண்டு. நம்முடைய பாவ இயல்பு மற்றும் எதிரியின் திட்டங்கள் காரணமாக, எல்லா இடங்களிலும் உபத்திரவத்தைக் காணலாம். நம் கஷ்டங்களால் நாம் ஆச்சரியப்படக்கூடாது; இந்த உலகில் நமக்கு சிரமம் ஏற்படும் என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ஏனென்றால் அவர் நேர்மையானவர், அவர் நம்மை நேசிக்கிறார். முன்கூட்டியே நம்மைத் தயார்படுத்துவதன் மூலம், கடினமான காலங்களில் நம்மைக் நாம் காணும்போது சந்தேகம் மற்றும் பயத்தைத் தவிர்க்க இயேசு நமக்கு உதவுகிறார்.

தாழ்மையான கீழ்ப்படிதல் எப்படி இருக்கும் என்பதை இயேசு நமக்குக் காட்டினார். நம்மில் பெரும்பாலோர் எதிர்கொள்ள வேண்டியதை விட மிகவும் கடினமான விஷயங்களில் அவர் கீழ்ப்படிந்தார்-சிலுவையில் மரணிப்பதை கூட. இப்போது, அவர் பிதாவாகிய கடவுளின் வலது புறத்தில் அமர்ந்து, நம் சார்பாக பரிந்து பேசுகிறார். நம்முடைய பலவீனங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஒரு நண்பர் நமக்கு இருப்பதை அறிந்து கொள்வதில் நாம் ஆறுதல் பெறலாம்.

ஒவ்வொரு கடினமான பயணமும் நம்மை கிறிஸ்துவுக்கும் அவருடைய நித்திய ராஜ்யத்துக்கும் நெருக்கமாக இழுக்கிறது என்பதை அறிந்து கொண்டாடலாம். இது எங்கள் நம்பிக்கை: இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் என்றென்றும் வென்றுள்ளார். மரணத்தால் அவரைப் பிடிக்க முடியவில்லை, கல்லறை அவரைக் கொண்டிருக்க முடியவில்லை, பாவத்தின் சக்தி அவரைத் தோற்கடிக்க முடியவில்லை, இருள் அவருக்கு எதிராக மேலோங்க முடியவில்லை!

சிலுவையில் கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலை நம்மை கடவுளின் பிள்ளைகளாக இருக்க அனுமதிப்பதால், நாம் பாவத்தையும் வெல்ல முடியும். இயேசு ஏற்கனவே உலகை வென்றுவிட்டார் - அதில் உள்ள ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் அடங்கும். இப்போது, இயேசுவோடு நம்முடைய நித்திய வீட்டை எதிர்நோக்கலாம்.

ஜேக்கப் ஆலன்வுட்
YouVersion இனையதள மேம்பாட்டாளர்

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

7 Things The Bible Says About Anxiety

ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.

More

இந்த திட்டம் YouVersion குழுவால் எழுதி, வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு youversion.com ஐப் பார்வையிடவும்.