திட்ட விவரம்

புதையல் வேட்டை 3மாதிரி

புதையல் வேட்டை 3

5 ல் 5 நாள்

நண்பரிடம் இருந்து நண்பருக்கு

பிடி

உன் சொந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஆழமான நீலப் பெருங்கடலை நீ ஆராய்வதை கற்பனை செய்து பார்... நீ என்ன பொக்கிஷங்களைக் கண்டெடுப்பாய்?

நீருக்கடியில் உள்ள உலகம் 95% ஆய்வு செய்யப்படவில்லை என்பது உனக்கு தெரியுமா? அப்படிப்பார்த்தால், நமது உலகில் வாழும் உயிரினங்களில் 85% பெயரிடப்படவில்லை என்பது உனக்கு தெரியுமா? ஆம், இதுவரை கவனிக்கப்படாத அனைத்து உயிரினங்களும்! அவைகளில் ஒன்றிக்கு நீ ஒரு நாள் பெயரிட நேரலாம்.

ஆம், நாம் ஒரு அற்புதமான உலகில் வாழ்கிறோம், சாத்தியங்கள் நிறைந்தது. ஆனால் நாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தால், இன்னும் அற்புதமான சாத்தியங்கள் ஏற்படும்! நாம் கஆண்டவருக்குக் கீழ்ப்படிந்தால், அற்புதங்கள் நிகழலாம்! மனிதர்களை முழுவதுமாக மாற்றி, நம் உலகத்தை மாற்றும் அற்புதங்கள்-இவை அனைத்தும் அவருடைய நற்செய்தியைப் பகிர்வதில் இருந்து தொடங்குகிறது.

இயேசு நம் அனைவரையும் அதையே செய்யும்படி கூறினார்:

படி

“பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”
மாற்கு 16:15

பார்

மீண்டும் ஒருமுறை, நற்செய்தி என்றால் என்ன?

நற்செய்தி இயேசுவே! இயேசு நம்மை நேசிக்கிறார். இயேசு நமக்காக மரித்தார். இயேசு நம்மை மன்னிக்கிறார்.

மீண்டும் ஒருமுறை, இந்த நற்செய்தியை நாம் ஏன் பகிர வேண்டும்?

ஆம், ஏனென்றால் இயேசு நமக்கு கட்டளையிட்டார். இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் இயேசுவைச் சந்தித்து அவர் எவ்வளவு அற்புதமானவர் என்பதைக் கண்டறிய முடியும்!

முக்கியமில்லாத விஷயங்களுக்காக மக்கள் எப்படி உற்சாகமடைகிறார்கள் என்பது வேடிக்கையானது... ஹேய், குவைத்தில் மெக்டொனால்டு தனது முதல் உணவகத்தைத் திறந்தபோது, உள்ளே செல்வதற்கான வரிசை ஏழு மைல்கள் நீளமாக இருந்தது! பர்கரைப் பெற நிறைய பேர் காத்திருந்தார்கள் - ஆம், ஒரு பர்கர்! ஆனால் நம்மிடம் பர்கரை விட அற்புதமான ஒன்று உள்ளது! நம்மிடம் இயேசு இருக்கிறார்! நமக்கு சொர்க்கம் உண்டு! நம்மிடம் உண்மையான வாழ்வு இருக்கிறது!

எடு

இயேசுவைப் பற்றி நீ எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்? புதையல் வேட்டை சவால் பாக்கெட்-மங்காவைப் பகிர்வது ஒரு மிக எளிதான வழி. உன் நண்பர்களும் அதை வாசிப்பதில் மகிழ்ச்சி அடையலாம், யாருக்குத் தெரியும், அவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கலாம்!

நீ இன்னும் அதைப் படிக்கவில்லை என்றால், புதையல் வேட்டை சவால் பாக்கெட்-மங்காவைப் படிக்க சில நிமிடங்கள் ஒதுக்கு அல்லது புதையல் வேட்டை செயலியை app store/playstoreல் இருந்து பதிவிறக்கம் செய்.

நீ அதை புதையல் வேட்டை இணையதளத்தில் காணலாம்:

https://www.treasurehuntproject.com/

முழு புதையல் வேட்டை வென்ச்சர் தொடரையும் பெற மறக்காதே!

பாக்கெட்-மாங்காவை (comic) இங்கே படிக்கலாம்:

be07c9_2a4cfe5e22f44f6dade5ed16563c656c.pdf (filesusr.com)

இப்போது நீ தெரிந்துகொண்டிருப்பாய், நீ சூப்பர் என்று!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 3

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japanக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ja.treasurehuntproject.com/_files/ugd/509686_2bd5af7fede04a2986e93229a59391df.pdf

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்