திட்ட விவரம்

புதையல் வேட்டை 3மாதிரி

புதையல் வேட்டை 3

5 ல் 4 நாள்

தயக்கமின்றி கத்து!

பிடி

மலேசியாவில் ஸ்லேட் (ஒரு வகையான பாறை) என்பதை எப்படி சொல்வார்கள் என்று தெரியுமா? சுலபம்! இப்படித்தான்; "செஜெனிஸ் படு பெர்வர்னா கெலபு கெபிரு-பிருவான் யாங் செலாலு திகுனகன் செபகை அடப் ருமான்"

ஹாஹா! இதைத் திரும்பவும் பத்து முறை வேகமாக சொல்ல முயற்சி!

பார்த்தோமானால், உலகில் உள்ள பாதி மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள்… ஆக, உன்னால் எத்தனை மொழிகளை பேச முடியும்?

இப்போது இதைப் பற்றி யோசித்துப் பாரு - உன்னால் கேட்க முடியாதபோது அல்லது பார்க்க முடியாதபோது ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பது! ஹெலன் கெல்லரைப் பற்றி உனக்குத் தெரியுமா? அவள் குழந்தையாக இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். அதன் காரணமாக அவள் பார்வையற்றவளாகவும், காது கேளாதவளாகவும் மாறினாள். ஆம், அவளால் பார்க்கவோ கேட்கவோ முடியாது. அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாரு. முழு இருளும் முழு அமைதியும். ஒரு அறைக்குள் நடப்பது கூட கடினமாக இருக்கும்!

ஆனால் பின்னர், ஹெலன் தனது கைகளால் செய்கைகளின் மூலமும் மற்றவர்களின் கைகளில் உள்ள அறிகுறிகளை தொட்டு உணர்வதன் மூலமும் தொடர்பு கொள்ள கற்றுக்கொண்டாள். ஹெலன் வெறும் சைகை மொழியை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை, அவள் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டாள்... ஆங்கிலம் மட்டுமல்ல, பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியையும் கூட! வார்த்தைகளை பார்க்காமலும், கேட்காமலும்!!! மற்றும் என்ன தெரியுமா? ஹெலன் ஆண்டவரைப் பற்றி உலகம் முழுவதும் பேசினாள்.

ஹெலன் தனது பிரச்சினைகளால் ஒருபோதும் சாக்குப்போக்கு சொல்லவில்லை, இந்த பைபிள் வசனம் உண்மையில் அவளுடைய வாழ்க்கையை சுருக்கமாகக் கூறுகிறது…

படி

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள். கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
ஏசாயா 12:4b-5

பார்

இந்த வசனம் என்ன செய்யச் சொல்கிறது என்பதை இன்னும் விரிவாகப் பார்ப்போம்: கோடிட்ட இடங்களில் என்ன எழுத வேண்டும்? கர்த்தரைத் _______. _______ தொழுதுகொள்ளுங்கள். _________ அறிவியுங்கள்.

சரி—ஆண்டவரைப் பற்றி ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்… “ஜனங்களுக்குள்ளே” என்பதன் அர்த்தம் என்ன?

இது முழு உலகத்தையும் குறிக்கிறது போல் தெரிகிறது, இல்லையா? எனவே, ஆண்டவர் செய்த மகத்தான காரியங்களை (சாட்சியளிக்க) - அனைவருக்கும், எல்லா இடங்களிலும் நாம் சொல்ல வேண்டும்!

உன்னால் அது முடியுமா? ஹெலன் கெல்லர் செய்தார். ஒப்பிடுகையில், நம்மில் பெரும்பாலோருக்கு இது எளிதானது, இல்லையா? (மேலும் ஹெலனிடம் வலைத்தளம் அல்லது இன்ஸ்டாகிராம் இல்லை!) நம்மால் பார்க்கவும் கேட்கவும் பேசவும் முடிந்தால், நாம் எளிதாக சாட்சியமளிக்க முடியும்.

எடு

இது எளிதானது, எப்படி என்பது இங்கே…

இந்த வாக்கியத்தை பூர்த்திசெய்:

இயேசு எனக்கு ஏன் அற்புதமானவர் என்றால் ________________________________.

இப்போது, இயேசுவை அறியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் இதைச் சொல்.

நீ இப்படி செய்யும் போது இயேசு நிச்சயமாக புன்னகைப்பார்.

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 3

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japanக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ja.treasurehuntproject.com/_files/ugd/509686_2bd5af7fede04a2986e93229a59391df.pdf

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்