திட்ட விவரம்

புதையல் வேட்டை 3மாதிரி

புதையல் வேட்டை 3

5 ல் 3 நாள்

இருப்பதிலேயே மிகவும் மோசமான இடம்!

பிடி

யாரும் சிந்திக்க விரும்பாத ஒரு இடம் இருக்கிறது - எங்கே இருக்கும் என்று யோசிக்கமுடியுமா? ஓ, அது சரி - ஒருவேளை நீயும் அதைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன்! இல்லை, நாங்கள் கணித வகுப்பைப் பற்றி பேசவில்லை, அது இதைவிட இன்னும் ரொம்ப ரொம்ப மோசமான இடம்.

அந்த இடம் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும், வலி மற்றும் வேதனை அங்கே எப்போதும் இருக்கும். அங்குள்ள அனைவரும், ஒருவரையொருவர் வெறுப்பவர்கள், தங்களைத் தாங்களே வெறுப்பவர்கள். ஆண்டவரிடம் வந்து மன்னிப்பை பெற்று, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு, தங்கள் வாய்ப்பைத் தவறவிட்டதற்காக, வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகளைத் தவறவிட்டதற்காக அவர்கள் எப்போதும் வருந்துகிறார்கள். இதை பெற்றுக்கொள்ளாமல் அவர்கள் அதை நீண்ட காலம் தள்ளி வைத்தனர். அல்லது அவர்கள் ஆண்டவரை கேலி செய்திருக்கலாம், மேலும் நரகம் என்ற ஒன்று பொய் என்று சிரித்திருக்கலாம். அது சரி, நான் விடையை கொடுத்துவிட்டேன் - நாம் யோசித்துக்கொண்டிருக்கும் இடத்தின் பெயர் நரகம்.

நீ நரகத்தைப் பற்றி நினைக்கும் போது, எதைப் பற்றி நினைக்கிறாய்? அது பார்க்க எப்படி இருக்கிறது? ஆமாம், எனக்கு புரிகிறது, நீ அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்று, ஹாஹா, ஆனால் இயேசு அதைப் பற்றி அதிகம் பேசுகிறார். நரகம் எப்படிப்பட்ட இடம்? சரி, மத்தேயு புத்தகத்தில், இயேசு ஆறு முறை நரகம் எப்படி இருக்கிறது என்பதை விவரிக்கிறார், மேலும் ஆறு முறையும் அவர் அதே வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், அங்குள்ள மக்கள் "அழுது பற்களை கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்".

இது சிரிக்கக்கூடிய ஒரு விஷயமில்லை- நரகம் என்பது ஒவ்வொரு அரக்கனும் பூதமும் பதுங்கியிருக்கும் இடம், ஒவ்வொரு திகிலும் கட்டவிழ்க்கப்பட்ட இடம், ஒவ்வொரு துன்பமும் பற்றிக்கொள்ளக்கூடிய இடம்...

இயேசு இதை மிகவும் தெளிவுபடுத்துகிறார், நரகம் என்பது உண்மை:

படி

அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
மத்தேயு 25:31-36, 41, 46

பார்

உலக முடிவில், இயேசு அனைவரையும் இரண்டு குழுக்களாக பிரிக்கிறார். என்ன இரண்டு குழுக்கள்? அவருக்கு சொந்தமானவர்கள் (செம்மறியாடு உருவகம்) மற்றும் அல்லாதவர்கள் (ஆடு உருவகம்). ஒவ்வொரு குழுவும் எங்கே போகிறது? சரி, அவருக்கு சொந்தமானவர்கள் சொர்க்கத்தின் அருமைக்குள் நுழைவார்கள், இல்லாதவர்கள் நரகத்தின் பயங்கரத்திற்குச் செல்வார்கள்.

உண்மையில், நீயும் நானும், மற்ற அனைவரும் நரகத்திற்குச் செல்லத் தகுதியானவர்கள், ஆனால் இயேசுவோடு நாம் மீட்கப்பட்டோம். ஆதலால், யார் வேண்டுமானாலும் சொர்க்கம் செல்லலாம்!!! பலர் உண்மையில் நரகத்திற்கு செல்வார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது! இப்போது கொஞ்சம் நடைமுறையில் யோசிப்போம். யாரும் நரகத்திற்குச் செல்வதை நீ விரும்பக்கூடாது! நரகம் என்பது பயங்கரங்களின் திகில், இயேசு சொன்னது போல், அது என்றென்றைக்குமானது.

இதைப்பற்றி நாம் ஏதாவது செய்யலாம்! நம் இயேசு சித்திரவதை செய்யப்பட்டு மரித்தார், நம்மை மீட்க. அவர் அனைவருக்கும் மன்னிப்பு என்னும் பரிசை வழங்குகிறார், இந்த பரிசைப் பெற்றுக்கொள்ள, நரகத்தின் வழி செல்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். எனவே, மக்களைக் காப்பாற்ற உன்னை பயன்படுத்துமாறு ஆண்டவரிடம் கேட்கத் தொடங்கு. முதலில் செய்ய வேண்டியது அந்த மக்களுக்காக ஜெபிக்கத் தொடங்குவதுதான்.

எடு

நீ யாருக்காக ஜெபிக்க விரும்புகிறாய் என்று ஒரு நிமிடம் சிந்தி.

அவர்களுடைய இருதயங்கள் இயேசுவுக்காக திறக்கப்பட வேண்டுமென்று கேள்.

நீ சூப்பர்!

Dr. Andy

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 3

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japanக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ja.treasurehuntproject.com/_files/ugd/509686_2bd5af7fede04a2986e93229a59391df.pdf

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்