திட்ட விவரம்

புதையல் வேட்டை 3மாதிரி

புதையல் வேட்டை 3

5 ல் 2 நாள்

உன் வாள் கூர்மையாக உள்ளதா?

பிடி

நீ எப்போதாவது போர்க்களத்தில் இருந்திருக்கிறாயா? இல்லை, நீ கேம் கன்ட்ரோலரைப் பிடித்துக் கொண்டு திரையின் முன் அமர்ந்திருக்கும் வகையானா போர் அல்ல. மெய்நிகர் (பொம்மை) போர்கள் சிறந்தவைதான், ஆனால் நாம் ஒரு உண்மையான போரைப் பற்றி இங்கே பேசுகிறோம் - நிஜமாக நடக்கும் ஒன்று!

ஒரு நிமிடம் ஒதுக்கி, மின்னும் வாள் உடைய ஒரு போர்வீரராக உன்னை இப்போது கற்பனை செய்து பார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நிலம் ஒரு தீய அரக்கனால் ஆளப்பட்டது. கண்களைச் சுருக்கி, வாளை உயர்த்தி, கோரைப் பற்களைக் கொண்ட இருளான ராட்சச எதிரியை நோக்கிச் சுடுகிறாய்! இதுவே நிஜமானப் போர்!

ஆனால் உனக்கு தெரியுமா, நீ உண்மையில் ஒவ்வொரு நாளும் ஒரு போரில் இருக்கிறாய் என்று? அது சரி, இது ஒரு ஆவிக்குரிய போர், அது மிகவும் உண்மையானது - அதைத்தான் பைபிள் சொல்கிறது. நம்முடைய போர் பிசாசுக்கு எதிரானது - அவன் நிஜமான ஒருவன், உன்னை வெறுப்பவன். அதற்குக் காரணம், நீ ஆண்டவருக்கு சொந்தமான ஒருவர், பிசாசு ஆண்டவரை வெறுப்பவன், அதனால் அவன் உன்னை எந்த வழியிலும் ஊக்கத்தை இழக்கவும், தடம் புரளவும், அழிக்கவும் விரும்புகிறான்.

“கொஞ்சம் பொறு! பிசாசு என்னைப் பிடிக்க வருகிறான் என்று சொல்கிறாயா?” -- என்று நீ நினைக்கலாம். நான் இதைத் தேனொழுக சொல்லப்போவதில்லை, வேதாகமத்தின் படி பதில் "ஆம்!" என்பதே.

ஆனால் நீ பயப்படத் தேவையில்லை. அதற்கு பதிலாக, நீ விழிப்புடன் இருந்து உன் வாளை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும். நீ பிசாசைப் பார்க்க முடியாது என்றாலும், அவன் வேலை செய்துகொண்டு இருக்கிறான். மேலும் அவன் தனது கைகளில் நிறைய பழைய தந்திரங்களை வைத்திருக்கிறான். அவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறான், இதில் அவன் மிகவும் தேர்ந்தவன். ஆனால் நீ கவலைப்பட தேவையில்லை. கவலைப்படுவதற்குப் பதிலாக, நீ தைரியமாக இருக்கலாம், ஏனென்றால் இயேசு உன்னுடன் இருக்கிறார், மேலும் இயேசுவோடு ஒப்பிடும்போது, பிசாசு ஒரு பனிதுளியைப் போன்றவன், இயேசு ஒரு பெரிய பனிமலையைப் போல இருக்கிறார்.

படி

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
கொலோசெயர் 1: 15-17

பார்

இயேசு எதை உருவாக்கினார்?

ஆம், நாம் இந்த பூமியால் காணும் அனைத்து இயற்கையையும் அவர் உருவாக்கினார்.

எதற்க்காக அனைத்தும் படைக்கப்பட்டது?

ஆம், அனைத்தும் ஆண்டவர் இயேசுவுக்காக உருவாக்கப்பட்டது.

எவைகள் ஆண்டவர் இயேசுவின் கட்டுப்பாட்டில் உள்ளன?

"அனைத்தும்" என்பதே மீண்டும் சரியான வார்த்தை.

கேள்விக்கு இடமே இல்லை - ஆண்டவர் இயேசுவே சர்வவல்லவர்!

மிகவும் சுவராசியமான விஷயம் இப்போது இங்கே: நீ இயேசுவுக்கு சொந்தமாக இருக்கும் போது, அவர் உன்னுள் வாழும் போது, அவருடைய அதிகாரம் உனக்கு இருக்கிறது. அதிகாரம் என்றால் என்ன? விஷயங்களை வசமாக்கும், கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் வல்லமை.

ஆவிக்குரிய உலகில் வெவ்வேறு அதிகார நிலைகள் உள்ளன என்பது உனக்குத் தெரியுமா? இயேசு உச்சியில் இருக்கிறார், நீ அவருடன் இருக்கிறாய். பேய்கள்/பிசாசுகள் மிகவும் கீழே உள்ளன. உண்மையில், மிக, மிக, கீழே. பனித்துளிக்கும் பனிமலைக்கும் உள்ள வித்தியாசம் நினைவிருக்கிறதா? பனிமலை ஒரு பனித்துளியைக் கண்டு பயப்படத் தேவையில்லை!

எடு

எனவே, உன்னிடம் ஒரு வாள் இருப்பதாக கற்பனை செய்து கொள். இது உன் முதுகில் கட்டப்பட்டுள்ளது. அந்த வாள் ஆண்டவரின் வார்த்தை, அதுவே சத்தியம். உன்னிடம் இந்த வாள் இருப்பதை நீ அறிந்து கொள்ளக்கூடாது என்று பிசாசு விரும்புகிறான். இயேசு உன்னுடன் இருக்கிறார் என்பதையும், இயேசு எல்லாவற்றிற்கும் எஜமானர் என்பதையும் நீ தெரிந்து கொள்ள அவன் விரும்பவில்லை.

எனவே, கொலோசெயர் 1:15-17ஐ வெளியே இழுக்கவும் (இது ஒரு வாளை வெளியே எடுப்பது போன்றது) இயேசு யார் என்பதை நினைவில் கொள்ள இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவும்/உச்சரிக்கவும். இயேசு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள். இயேசுவே இரட்சகர். மேலும் இயேசு உன்னோடு இருக்கிறார்.

நீ பயப்படத் தேவையில்லை. நீ ஆண்டவருடன் எதையும் எதிர்கொண்டு மேற்கொள்ளலாம்.

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 3

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் ...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Miracle Every Day Japanக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ja.treasurehuntproject.com/_files/ugd/509686_2bd5af7fede04a2986e93229a59391df.pdf

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்