பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி
பரிசுத்த ஆவியானவர் நமக்கு மரிக்க உதவுகிறார்
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். —1 பேதுரு 4:14
காரி டென் பூம் சிறு பிள்ளை வயதில் ஜெர்மானியர் தன்னை மிரட்டினால் எதிர்த்து நிற்பேனா என்று கவலைப்பட்டதாக கூறுகிறார்கள். என்ன நடக்குமோ என்று நினைத்தபோதெல்லாம் மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக கூறுகிறார். அவருடைய தந்தையென்று நினைக்கிறன், ஒரு பெரிய விளக்கத்தை கொடுத்தார். அவர் சொன்னார் "நீ ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால் உன் பயணசீட்டை மூன்று வாரம் முன்பாக கொடுப்பேனா அல்லது பயணத்திற்கு முன்னாள் கொடுப்பேனா?. அவர் பதில் அளித்தார், "ரயில் ஏறும்போது தான்". "அதேபோல் தேவனும் மரணத்தின் முகத்தில் முன்னால் உனக்கு விசேஷித்த பெலனை தருவார், அதற்கு முன்னாள் அல்ல.”
1 பேதுரு 4:14 மிகப்பெரிய சோதனையின்போது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து தன்னால் இயலாத அளவு தாங்குவதற்கென்று வாக்களிக்கிறதென்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் நமக்கு மரிக்க உதவுகிறார்.
சரித்திரம் பவுல் நீரோவினால் சிரைசேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று சொல்கிறது. பவுலின் கடைசி நிரூபம் 2 தீமோத்தேயு. அவருடைய வழக்கு விசாரணை ஏற்கனவே துவங்கியிருந்தது. அந்த வயதுசென்ற போர்சேவகனை யூகித்துப்பாருங்கள், அவருடைய தலைமை வீரருக்காக காயப்பட்டு, ரோமாபுரியில் சிறைப்பட்டவராக. அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் தெரியும் அவருடைய நாட்கள் குறைவுதான் என்று. அவர் மரணத்திற்கென்று குறிக்கப்பட்டிருந்தார். அவருடைய நண்பர்கள் அவரோடு இல்லை. அவருடைய எதிர்வினையை சொல்ல துவங்குகிறார். பிறகு முடிவு. அவருடைய அறைக்கு சென்று இந்த வார்த்தைகளை தீமோத்தேயுவிற்கு எழுதுகிறார் (2 தீமோத்தேயு 4: 16-17), "நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்."
இந்த வார்த்தைகளை நியாபகம் வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்: பரிசுத்த ஆவியானவர் நமக்கு மரிக்க உதவுகிறார். யாரும் இல்லாத வேளையில் உங்கள் அருகே அவர் நிற்பார். உங்கள் விசுவாசத்தை நிலைநிறுத்துவார். மகிமையின் தரிசனங்களை அவர் உங்களுக்கு தருவார். உங்கள் மரணத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்த உதவுவார். நீங்கள் கூடாது என்று நினைத்த தைரியம் உங்களுடையதாகும். மகிமையின் தேவனின் ஆவியானவர் உங்கள் மீது தங்கியிருந்து உங்களை வீட்டிற்கு எடுத்துச்செல்வார்.I pray that you will remember these words.
இன்னும் அறிய: http://www.desiringgod.org/messages/the-holy-spirit-will-help-you-die
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்
More