பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி
பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறார்
வாழ்வின் புதிர்களை புரிந்துகொள்ள திரும்ப திரும்ப வேதாகமம் நமக்கு உதவுகிறது: உடைந்துபோகும் திருமணங்கள், முரட்டாட்டமான பிள்ளைகள், போதை மருந்துக்கு அடிமைத்தனம், யுத்தமிடும் தேசங்கள், வசந்த காலத்தில் இலைகள் துளிரிடுவது, நம் இருதயத்தின் தீராத வாஞ்சைகள், மரண பயம், பிள்ளைகளின் வரவு, துதி மற்றும் பழி, பெருமையின் மிகுதி, சுய மறுப்பின் போற்றுதல்.
வேதாகமம் உண்மையான உலகத்தின் உண்மையை நமக்கு புரியவைப்பதன் மூலமாக அதனுடைய திவ்விய துவக்கத்தைதிரும்ப திரும்ப நிரூபிக்கிறது. எல்லா வேதாகம உண்மைகளுக்கும் பரிசுத்த ஆவியானவரே ஆதாரம் என்று அறிந்துகொள்வதே உங்கள் கோட்ப்பாடாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்.
இந்த கோட்டபாட்டை குறித்து பேச நமக்கு ஒரு நாள்முழுதும் கிடைத்தால் நலமாய் இருக்கும். நித்திய பரிசுத்த ஆவியானவர், அன்பின் ஆவியானவர், பிதா மற்றும் குமாரனின் மகிழ்ச்சியின் ஆவியானவர், அவரே வேதாகமத்தின் ஆதாரமாக இருக்கிறார்.
- ஆகவே அது உண்மையாகவும் (சங்கீதம் 119:142) மற்றும் நம்பத்தக்கதாகவும் (எபிரேயர் 6:18) இருக்கிறது.
- அது வல்லமையானதாகவும், நம் இருதயத்தில் கிரியைசெய்கிறதாயும் (1 தெசலோனிக்கேயர் 2:13) அனுப்பினவரிடம் வெறுமையாக திரும்பாததாயும் (ஏசாயா:55:10-11) இருக்கிறது.
- அது சுத்தமாகவும், ஏழு முறை தீயில் புடமிடப்பட்டதாகவும், (சங்கீதம் 12:6) இருக்கிறது.
- அது பரிசுத்தமாக்குகிறதாகவும் இருக்கிறது (யோவான் 17:17).
- அது ஜீவனை தருகிறது (சங்கீதம் 119:37, 50, 93, 107; யோவான் 6:63; மத்தேயு 4:4).
- அது ஞானமாக்குகிறது (சங்கீதம் 19:7;119:99–100).
- அது சந்தோசஷத்தை அளிக்கிறது (சங்கீதம் 19:8; 119:16, 92,111, 143, 174) மற்றும் மகாபெரிய வெகுமதியை வாக்களிக்கிறது (சங்கீதம் 19:11).
- அது பெலவீனர்களுக்கு பெலனை அளிக்கிறது (சங்கீதம் 119:28) மற்றும் கலங்கினவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது (சங்கீதம் 119:76) மற்றும் குழப்பமானவர்களுக்கு வழிநடத்துதலை தருகிறது (சங்கீதம் 119:105) மற்றும் காணாமல் போனவர்களுக்கு இரட்சிப்பை தருகிறது (சங்கீதம் 119:155; 2 தீமோத்தேயு 3:15).
வேதாகமத்தில் தேவனுடைய ஞானம் அளவற்றது. இந்த கோட்ப்பாடு உண்மையானால், அதன் உட்குறிப்பு அதிக அர்த்தம் கொண்டது, அது நம்முடைய ஜீவியத்தில் ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கும்.
இன்னும் தெரிந்துகொள்ள http://www.desiringgod.org/messages/the-holy-spirit-author-of-scripture
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்
More