பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி
ஆவியானவரே தேவனுடைய மகிழ்ச்சி
பரிசுத்த ஆவியானவர் தேவனாய் இருக்கிறார். நமக்குள்ளிருந்து, நம்மை வழிநடத்தி, சுத்திகரிக்கிறவர் தேவனுக்கு குறைவாக இருக்கமுடியாது, அதுவே பரிசுத்த ஆவியானவர். இதற்கு இயல்பான ஒரு ஆதாரம்தான் அவருடைய பெயர் "தேவ ஆவியானவர்". ஆவியானவர் "தேவனால் உண்டானவராக" இருப்பது தேவனால் அவர் சிருஷ்டிக்கப்பட்டதினால் அல்ல, மாறாக தேவனுடைய சுபாவத்தை அவர் கொண்டிருப்பதினாலும் நித்தியமாக தேவனிடமிருந்து வருவத்தினாலும் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். (1 கொரிந்தியர் 2:10-12).
யோவான் 1:1-3 சொல்வதுபோல், தேவ குமாரன் நித்தியத்தில் தேவனுக்கு சமமாக இருப்பாரென்றால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரும் அவர்கள் இவரோடு சமமாக இருக்கிறார், ஏனென்றால், ரோமர் 8:9-11, கிறிஸ்துவின் ஆவியானவர் தேவ ஆவியானவராய் இருக்கிறார் என்று நமக்கு தெளிவுபடுத்துகிறது. இது இவ்வாறு இல்லாதிருந்தால், ஒரு நேரத்தில் குமாரனுக்கு ஆவியில்லாமலும், பிதாவிற்கு ஆவியில்லாமலும் இருந்திருக்கவேண்டும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே இருந்த உறவிற்கு அவசியமாக இருக்கிறார். ஹண்ட்லி சி.ஜி.மௌலி அவருடைய வார்த்தையில் "பரிசுத்த ஆவியானவர் முடிவாக, உறவாக, ஊடகமாக, அல்லது நித்திய மகிழ்ச்சியாக மற்றும் அன்பாக இருக்கிறார்" (Person and Work of the Holy Spirit, p. 28).
பிதா குமாரனை நேசித்த நித்தியத்தின் ஆரம்பத்திலிருந்து, ஒரு அளவில்லாத அன்பும் மகிழ்ச்சியும் இருவரின் மத்தியில் உருவாக்கும் பரிசுத்த ஆவியானவர் இருந்துவந்திருக்கிறார், அவரே ஒரு திவ்விய நபராகவும் இருந்திருக்கிறார். ஆகவேதான், யோவான் 17:26இல் இயேசு சபைக்காக ஜெபித்தபோது, பிதாவினிடம் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கிறார், "நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்".
வரும் 7 தியானங்களில் நாம் அறியவிருக்கிற மகா மகிமையான சத்தியம் என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் நம் ஜீவியத்திற்குள் வரும்போது, அவர் வெறும் குமாரனின் ஆவியாகவோ, அல்லது வெறும் பிதாவின் ஆவியாகவோ அல்லாமல் பிதா மற்றும் குமாரனுக்கு இடையேயான அளவில்லாத அன்பின் ஆவியானவராக வருகிறார்.அதன்மூலமாக நாம் பிதாவை குமாரனின் அன்பினாலும், குமாரனை பிதாவின் அன்பினாலும் நேசிக்கமுடியும்.
இன்னும் அறிந்துகொள்ள: http://www.desiringgod.org/messages/the-holy-spirit-he-is-god
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்
More