பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி

Live By The Spirit: Devotions With John Piper

7 ல் 5 நாள்

பரிசுத்த ஆவியானவர் நம்மை சந்தோஷத்தால் நிரப்புகிறார்

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து — எபேசியர் 5:15-18

மக்கள் ஏன் மதுபானத்திற்கு திரும்புகிறார்கள்? ஒரு சந்தோஷமான மணி நேரத்திற்காக. நாம் யாவரும் சந்தோசஷமாக இருக்கவேண்டும், ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. "நாட்கள் பொல்லாதவைகளானதால்" (வசனம். 16).

நாட்கள் பொல்லாததாய் இருக்கும்போது எங்கு திரும்புவது, நீங்கள் பயப்படும்போது, அல்லது சோர்ந்துபோகும்போது, அதைரியப்படும்போது? பவுல் கெஞ்சுகிறார் "மதுவிற்கு செல்லாதீர்கள்; பரிசுத்த ஆவியானவரிடம் திரும்புங்கள். மதுவினால் பெறக்கூடியதை காட்டிலும் பரிசுத்த ஆவியானவரால் தரமுடியும்.

சில மக்கள் வேலைப்பளுவினால் சோர்ந்து ஒரு பாடலையோ ராகத்தையோ பாடக்கூடாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மாலையில் குடித்துக்கொண்டே சந்தோசஷமாக மற்றவர்களோடு நேரத்தை செலவழிப்பார்கள்.

நாம் அனைவரும் கவலையில்லாமல், சோகமில்லாமல், சந்தோசஷமாக இருக்க விரும்புகிறோம். பவுலின் நாட்களைப்போலவே நம்முடைய நாட்களின் சோகம் என்னவென்றால் கிறிஸ்துவர்கள் உட்பட மக்கள் அநேகர் மதுவினால் அல்லது போதை வஸ்துக்களினால் தான் சந்தோஷத்தைப்பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட நடக்கை தேவனை கனவீனப்படுத்துகிறது. பவுல் சொல்கிறார்" பொல்லாத நாட்களை சகிப்பதற்கு இன்னும் சிறந்த வழி உள்ளது - ஆவியானவரால் நிரம்பி இருப்பது, அதுவே அளவில்லாத சந்தோஷத்தினாலும் பாடல்களினாலும் தேவனுக்கென்று நிறைந்திருக்க உதவும்.

ஆகவே, ஆவியினால் நிறைந்த வாழ்க்கை என்றால் என்ன?

நம்மை நிரப்புகிற பரிசுத்த ஆவியானவர் பிதா குமாரன் மத்தியில் இருக்கும் சந்தோஷத்தின் விளைவான சந்தோஷத்தின் ஆவியாக இருக்கிறார். ஆகவே பரிசுத்த ஆவியானவரினால் நிரம்பி இருந்தால் இந்த பிதா குமாரன் பரிசுத்த ஆவியினால் வரும் சந்தோசஷத்தை பெற்றுக்கொள்வதாக இருக்கும்.

நம்முடைய பயத்தின் காடுகளில் நம்மை தேடி வரும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறார். பவுல் சொல்கிறார் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் சிட்டுக்குருவி விழாதபடி (மத்தேயு 10:29) போல் இருந்து அவருடைய வார்த்தையை நம்ப உதவுகிறது. அதன்மூலம் அவருடைய பரிசுத்த ஆவியை பெற்று சந்தோஷத்தை பெற்று கொள்ளமுடியும்.

இன்னும் அறிய: http://www.desiringgod.org/messages/be-filled-with-the-spirit

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Live By The Spirit: Devotions With John Piper

பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக ஜான் பைப்பர் மற்றும் 'டெசிரிங் கோட்' அமைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம். இன்னும் தகவலுக்கு, http://www.desiringgod.org/என்ற இணையதளத்தை பார்வையிடவும்