பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி

Live By The Spirit: Devotions With John Piper

7 ல் 4 நாள்

பரிசுத்த ஆவியானவர் நம்மை பாதுகாக்கிறார்

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். — எபேசியர் 1:13-14

தேவன் நாம் அவருடைய அன்பிலும் வல்லமையிலும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்றே விரும்புகிறார். வாழ்வின் வேறு எல்லா காரியங்களும் நிலையற்றதாக இருக்கலாம் - நம் ஆரோக்கியம், நம் குடும்பம், நம் வேலை, நம் படிப்பு, நம் சமுதாயம், நம் உலகம். இந்த எந்த ஒரு காரியங்களிலும் ஒரு கணிக்க முடியாத காற்றில் சிக்கினவர்போல் உணரக்கூடும். நீங்கள் ஒருவேளை தடுமாறி விழுவதுபோலவும் பிடிப்பில்லாமல் தவிப்பதுபோலவும் உணரக்கூடும்.

தேவன் அனைத்தையும் அவர் மகிமைக்கென்று செய்வதினாலும், அவருடைய வார்த்தையில் நம்புவது அவருடைய மகிமையை பிரஸ்தாபப்படுத்துவத்தினாலும், தேவன் அவருடைய மகிமை பிரஸ்தாபம் நிலைத்திருக்க நிச்சயமான காரியங்களை செய்கிறார். விசுவாசிகளை பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு நிரப்புகிறார், அதன்மூலம் அவருடைய பரம்பரை உரிமையை பெற்றுக்கொள்ள நிச்சயப்படுத்துகிறார்.

தேவன் அவருடைய மகிமைக்கென்று நித்தியமாக ஜீவிக்கும் அவருடைய சொந்தமான ஜனங்களை கொண்டிருக்க மிகவும் உருக்கமாக விரும்புகிறார். அதனால் நாம் விரும்பும் அல்லது செய்யும் சொந்த வல்லமையினால் நம்முடைய நித்திய முடிவை மாற்ற மனதில்லாமல் இருக்கிறார். அவருடைய பரிசுத்த ஆவியானவரை நம்முடைய ஜீவியங்களுக்குள் வர ஏற்படுத்துகிறார். அதன் மூலம் நாம் நித்தியத்திற்கு பாதுகாக்கபட செய்கிறார்.

தேவன் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய விசுவாசத்தை பூட்டும் ஒரு முத்திரையாக அனுப்புகிறார். நம்முடைய குமாரத்துவத்தை உறுதிசெய்யும் அடையாளமாகவும் அழிக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் தடுப்பாகவும் அனுப்புகிறார். அவருடைய அன்பிலும் வல்லமையிலும் நாம் பாதுக்காப்பாக உணரவேண்டும் என்பதே தேவனின் குறிக்கோளாக இருக்கிறது.

எபேசியர் 1:14 இல் தேவன் சொல்கிறார் "அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்." அதற்கு அர்த்தம் என்னில் விசுவாசிக்கிறவர்களிடம் என்னுடைய பெரிய வாஞ்சை என்னுடைய அன்பில் பாதுக்காப்பாக உணரவேண்டும் என்பதுதான். உலகத்தின் தோற்றமுதல் உங்களை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். என்னுடைய பிள்ளைகளாக உங்களை தெரிந்திருக்கிறேன். என்னுடைய குமாரனின் இரத்தத்தினால் உங்களை மீட்டிருக்கிறேன். என்னுடைய பரிசுத்த ஆவியினால் முத்தரித்திருக்கிறேன். ஆகவே என் சுதந்திரத்தை பெற்று என்னுடைய கிருபையின் மகிமையை என்றென்றைக்கும் துதிப்பீர்கள்.

இதை நான் எபேசியர் 1 இல் சொல்கிறேன் ஏனென்றால் நீங்கள் என் அன்பையும் வல்லமையையும் உணரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு சுலபமான வாழ்வை நான் வாக்களிக்கவில்லை. அநேக துன்பங்களினுடாக ராஜ்யத்திற்குள்ளாக பிரவேசிக்கவேண்டும் (அப்போஸ்தலர் 14:22). இன்னும் ஒரு முறை நான் சொல்லட்டும். நான் உங்களை தெரிந்துகொண்டேன். உங்களை முன்குறித்திருக்கிறேன். உங்களை மீட்டிருக்கிறேன். என்னுடைய ஆவியைக்கொண்டு முத்தரித்திருக்கிறேன். உங்கள் சுதந்திரம் நிச்சசயமாகி இருக்கிறது, ஏனென்றால் உங்கள் இரட்சிப்பின் மகிமையை மகிமைப்படுத்த நான் விரும்புகிறேன்.

இன்னும் அறிய: http://www.desiringgod.org/messages/sealed-by-the-spirit-to-the-day-of-redemption

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Live By The Spirit: Devotions With John Piper

பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக ஜான் பைப்பர் மற்றும் 'டெசிரிங் கோட்' அமைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம். இன்னும் தகவலுக்கு, http://www.desiringgod.org/என்ற இணையதளத்தை பார்வையிடவும்