அன்னாள்மாதிரி
குணநலன் 5: நன்றியுள்ள இருதயம்
அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்;வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
1 சாமுவேல் 2:1,10
தன் பிள்ளையான சாமுவேலை ஆசாரியனாகிய ஏலியிடம் கொடுத்து விட்டு மறுபடியும் ஜெபம் பண்ணி ஆண்டவரே துதித்தாள் .
தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அவராலே முடியாதது ஒன்றும் இல்லை,அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்
என்று மனதார புகழ்ந்து பாடினாள்.
தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது நன்றி செலுத்துவது இயல்பு. ஆனால் பெற்றுக்கொண்டு திரும்பி அதை கொடுத்து விடும்போது நன்றி செலுத்துவது அரிது. ஆசையாய் பெற்றெடுத்த ஒரே மகனை இனி தன்கூட வைத்திருக்க முடியாது என்ற சூழ்நிலையில் அவள் மனது பிரிவினால் வேதனை அடைந்தாலும்,1 சாமு 2: 1-10 வசனங்களில் இருந்த அவளுடைய பாட்டின் வரிகள் ஒவ்வொன்றும் தேவனை மகிமைப்படுத்துகிறதாகவும்,அவள் உற்சாக மனதையும் , நன்றியுள்ள இருத்தயத்தையும் வெளிப்படுத்துகிறது .
அநேக முறை நாம் அழுது மன்றாடி தேவனிடம் கேட்டதைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால் நன்றி செலுத்துவதை மறந்து விடுகிறோம்.
அன்னாள் தேவனையும், அவள் செய்த பொருத்தனையும் மறக்காமல், அதே இடத்திற்கு மறுபடியும் சென்று நன்றி தெரிவிக்கும் விதமாக காளைகளை பலியிட்டள்.அதே நேரத்தில் உதடுகளின் பலியாகிய ஸ்தோத்திர பலியையும் தேவனுக்கு செலுத்தினாள் .
லூக்கா 17:12-19 இல்,சுகம் பெற்ற பத்து குஷ்டரோகிகளில் ஒருவன் மாத்திரம் வந்து இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்தும் போது, இயேசு,'நான் 10 பேரை சுகமாக்கினேன் அல்லவா.மீதி 9 பேர் எங்கே?என்றார். நாம் ஆராதிக்கும் தேவன், நன்றியை எதிர்பார்க்கிறவர். அதிலே அவர் மகிமைப்படுவார். அவருடைய இருதயம் குளிரும்.
அது மட்டுமல்லாமல், அன்னாள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டவளாய் அவள் பாட்டில் தீர்க்கதரிசனம் உரைத்தாள்(1 சாமு 2:10). ராஜாக்களே இல்லாத நாட்களில், ராஜா என்று குறிப்பிட்டு மேசியாவை பற்றி பாடுகிறாள் (1 சாமு 2:10).
அன்னாள், வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், சாமுவேலுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள். ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்(1 சாமுவேல் 2:19-21).
நாம் தேவனை உயர்த்தும்போது அவர் நம்மை உயர்த்துவார். அன்னாளுக்கு ஐந்து பிள்ளைகளை கொடுத்ததும் அல்லாமல் சாமுவேலை இஸ்ரவேலுக்கு ஆசாரியனாகவும் நியாயாதிபதியாகவும் தீர்க்கதரிசியாகவும் அவள் காணும் போது இன்னும் அதிகமாக ஒவ்வொரு நாளும் துதித்திருப்பாள்.
இப்படிப்பட்ட நன்றியுள்ள இருதயம் நம் ஒவ்வொருக்கும் இருக்கும்படியாக தேவனிடம் வேண்டிக் கொள்வோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/