சாட்சிமாதிரி

சாட்சி

5 ல் 3 நாள்

குடும்பமாக முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8

இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொண்ட நாம் நம்முடைய குடும்பத்திலே வெளிச்சத்தின் பிள்ளைகளாகநடமாடுகிறோம். ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டால் அவன் தன்னுடைய முழு குடும்பத்திற்கும்வெளிச்சமாகவும் ,அந்த வெளிச்சத்தை நோக்கி அவர்களை அழைத்துசெல்கிறவனாயிருக்கிறான்.அவனுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவனைக் கொண்டுமுழுக் குடும்பத்தையும் பாவம்,சாபம், கோபம்,வேசித்தனம் ,விபச்சாரம், விக்கிரக ஆராதனைஎன்கிற அந்தகாரத்திலிருந்துவிடுவித்து,வெளிச்சமாகியபரிசுத்தத்திற்குள் கொண்டுவருகிறார்.ஆகையால் இரட்சிக்கப் பட்டவர்கள் குடும்பத்திற்குவெளிச்சத்தைக் கொடுத்துசாட்சியாக வாழ்கிறார்கள்.எனவே தான் வாழ்க்கைத் துணை, பெற்றோர்,பிள்ளைகள்,உடன்பிறந்தவர்கள்,உற்றார் உறவினர் அனைவரு‌ம் அந்த மனிதனுக்குள் இருக்கும்வெளிச்சத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்.அந்த மனிதனுக்குள் இருக்கும்வெளிச்சத்தில் களிகூருகிறார்கள்.ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

சாட்சி

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.

More

https://indiarevivalministries.org/