சாட்சிமாதிரி

சாட்சி

5 ல் 2 நாள்

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். 1 கொரிந்தியர் 11:31 என்ற வார்த்தையின் படி நம்மை நாமே நிதானித்து பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம்நம்மில் மாற்றம் உள்ளதா என்பதை நிதானித்து அறிய வேண்டும். அறிந்து அதில்நிலைத்து இருக்க வேண்டும. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. என்ற வேதவார்த்தையின் படி நம்முடைய கண்களில் பரிசுத்தம், நடக்கையில் பரிசுத்தம்,வார்த்தையில் பரிசுத்தம்,சிந்தையில் பரிசுத்தம்,இருதயத்தில் பரிசுத்தம்காணப்படுகிறதா என்பதை நம்மை நாமே நிதானித்துஅறிய வேண்டும் இப்படியாக பரிசுத்தத்தின் மேல்பரிசுத்தம் நாம் அடையும் போதுநம்முடைய மனசாட்சி நம்மைகுறித்து சாட்சி கொடுக்கும் இப்படியாக நாம் தேவனுக்குள் புது சிருஷ்டியாக்கப்பட்டுஞானப்பாலாம் வேத வார்த்தையில் தாகமாக இருந்து ஞானப்பாலைஆர்வமாக பருகும் போதுஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து சாட்சியாக இருந்துகனிகளை தேவனுக்கென்றுகொடுக்கிறோம். நாம் கிறிஸ்துவின் சிநேகிதர்களாக ,தேவனுடைய பிள்ளையாக ,நடமாடுகிற நிருபமாக பரிசுத்த ஆவியால் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாட்சியாக நிற்கும் படி கர்த்தர்கிருபை செய்கிறார்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

சாட்சி

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே உங்கள் நடை ,உடை ,பாவனைகள் எல்லாமே இயேசுவைப் போலவே மாறுகிறது. இந்த வாழ்க்கை தான் சாட்சி வாழ்க்கை ஏன் என்றால் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார். நம்முடைய குடும்பத்தில், சபையில்,சுற்றுப்புறங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், சமுதாயத்தில்,கிறிஸ்துவை வெளிப்படுத்துவது சாட்சியுள்ள வாழ்க்கை தேவன் அதை விரும்புகிறார்.

More

https://indiarevivalministries.org/