தப்பிப் பிழைக்கும் கலைமாதிரி

நீங்கள் பாதிக்கப்பட்டவரல்ல
பாதிக்கப்பட்டவர்களுக்கும், தப்பிப் பிழைப்பவர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் “எனக்கு” மற்றும் “தற்போது” என்னும் லென்ஸ்கள் வழியாகப் பார்க்கிறார்கள். தப்பிப் பிழைப்பவர்கள் வெகுதூரத்தையும், அதிக உயரத்தையும், ஆழத்தையும் பார்க்கக் கூடிய தேவன் அருளும் லென்ஸ்கள் வழியாகப் பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சந்தோஷமாக எண்ணி, தேவனுடைய ஞானத்தைக் கேட்டு, நித்தியமான ஒரு கண்ணோட்டத்தைப் பெற்றுக்கொண்டு, அன்பினால் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
தப்பிப் பிழைப்பவரின் கண்ணோட்டமிருந்தால், சோர்வை மேற்கொள்வதற்கு அவசியமான அனைத்தும் உங்களிடம் இருக்கும்.
ஆனால், அதற்கு நீங்கள் போராட வேண்டியதாக இருக்கும். நீங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, மூன்று பரிசோதனை கேள்விகளுடன் யுத்தத்திற்குச் செல்லுங்கள்:
1.அழியக்கூடியவை அல்லது நிரந்தரமானவை - என்னுடைய விசுவாசம் எதன் மீதிருக்கிறது?
இதன் அடிப்படையில் உங்கள் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் நம்பிக்கை நிலையான காரியங்கள் மீதிருக்கிறதா அல்லது நிலையற்ற காரியங்கள் மீதிருக்கிறதா? சோதனைகளும், இழப்புகளும், பின்னடைவுகளும், கஷ்டங்களும் உங்களை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது. மேலான காரியங்கள் மீது உங்கள் கண்களைப் பதிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.
2.என் பிரச்சனைகள் அல்லது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் - என்னுடைய நம்பிக்கை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?
உங்கள் பிரச்சனைகள் முடிந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது தேவனுடைய நீண்டகால நோக்கங்கள் மற்றும் திட்டங்களில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எந்த லென்ஸ் வழியாகப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்யுங்கள். பிரச்சனை அல்லது வாக்குத்தத்தத்தின் மீது என்று ஏதேனும் ஒன்றின் மீதுதான் நீங்கள் கவனம் செலுத்தலாம். நம்பிக்கையினால் நிறைந்திருக்கத் தீர்மானியுங்கள்.
3.கிறிஸ்துவை நேசிப்பது அல்லது நிம்மதியை மட்டும் பெற்றுக் கொள்வது - என்னுடைய முக்கிய நோக்கம் எது?
இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது எப்போதும் சுலபமானதல்ல. ஆனால், உலகெங்கும் பாடுகளின் மத்தியிலும் தேவனுக்கு ஊழியம் செய்யும் அநேக விசுவாசிகளைப் பார்க்கும்போது, அங்கு அன்பு சித்தரிக்கப்படுவதைப் பார்க்கிறேன். அவர்கள் தங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்தவருக்காக கஷ்டங்களை சகிக்க விரும்புகிறார்கள்.
நீங்கள் சோர்வுறத் தொடங்கும்போதெல்லாம், இக்கேள்விகளின் மையமாக இருக்கும் மூன்று வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு.
1.விசுவாசம், தேவன் ஆளுகை செய்கிறார் என்னும் உண்மை நிலையுடன் உங்கள் இருதயத்தையும், மனதையும் நங்கூரமிடுகிறது.
2.நம்பிக்கை, அவர் உங்களுக்காக ஒரு திட்டத்தையும், வாக்குத்தத்தத்தையும் வைத்திருக்கிறார் என்பதை உங்களுக்கு நினைவுறுத்துகிறது.
3.அன்பு, உங்கள் கவனத்தை கஷ்டங்களிலிருந்து மாற்றி, உங்கள் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக அவர் நிமித்தம் பாடு அனுபவிக்கும் சிலாக்கியத்திற்கு நேராகத் திருப்புகிறது.
உற்சாகமூட்டும் இவ்வார்த்தைகளை இன்று தியானியுங்கள். அவை நம்முடைய தற்போதைய நெருக்கங்களைத் தாண்டி நித்திய எதார்த்தங்களைக் காண நமக்கு உதவுகின்றன. தப்பிப் பிழைக்கும் கலையைப் பயிற்சி செய்வதால், நாம் சோதனைகளைக் கடந்து செல்வதோடு, ஜீவகிரீடத்தைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாகிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இவ்வுலக வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது. நீங்கள் கூட தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து, “ஏன்?” என்றோ அல்லது “இதிலிருந்து நான் எப்படித் தப்பிப் பிழைப்பேன்?” என்றோ கேட்டுக் கொண்டிருக்கலாம். யாக்கோபு புத்தகத்தில் இதற்கான பதில்கள் உண்டு! இந்த ஐந்து-நாள் வாசிப்புத் திட்டத்தில், தப்பிப் பிழைக்கும் கலையை அறிந்து, கடினமான நேரங்களிலும் எவ்வாறு தேவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதைப் பற்றி சிப் இங்ராம் பகிர்ந்து கொள்கிறார்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜ்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/product/art-of-survival-book/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு புதிய ஆரம்பம்

சீடத்துவம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
