தப்பிப் பிழைக்கும் கலைமாதிரி

கேட்க வேண்டியதொரு வளம்
எல்லையற்ற ஞானத்தை வாக்குத்தத்தமாக வழங்கும் ஒரு வெற்றுக் காசோலை தேவனிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதைக் கொண்டு, எங்கு வசிப்பது, சரீர சுகப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது, வேலையிழப்பை எப்படிக் கையாள்வது, அல்லது இன்றைய நாளை எப்படிக் கடந்து செல்வது என எல்லாவற்றையும் நீங்கள் அவரிடம் கேட்கலாம்.
ஆனால் இதில் ஒரு நிபந்தனை உண்டு. அவர் கொடுக்கும் ஞானத்தைப் பின்பற்றுவதற்கு நீங்கள் உங்களை முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டும்.
இந்த நிபந்தனையில் இரு பகுதிகள் உண்டு என்று இன்றைய வேதப்பகுதி கூறுகிறது:
·நீங்கள் “விசுவாசிக்க” வேண்டும் – நீங்கள் விசுவாசத்துடன் அவரிடம் வர வேண்டும். இதற்கு நிச்சயமாக ஒரு காரியம் அவசியம். நீங்கள் அவரை நம்பி, அவருடைய குணாதிசயத்திலும் வார்த்தையிலும் திடநம்பிக்கை கொண்டு, அவர் உங்களுக்குக் காண்பிப்பதை செய்ய உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
·“சந்தேகம்” கூடாது – தேவனுடைய ஞானத்தை ஏதோ ஒரு தகவல் போல எடுத்துக் கொள்ளக் கூடாது. விசுவாசத்தில் அதை ஏற்றுக் கொண்டு, எதற்குக் கீழ்ப்படிவது, எதை விடுவது என்பதை உங்கள் இஷ்டம் போலத் தெரிவு செய்தல் கூடாது. அப்படிச் செய்பவர்கள் இருமனமுள்ளவர்கள் ஆகிறார்கள். அது, “நடந்தால் பார்ப்போம்” என்பது போன்ற ஜெபமாகி விடும்.
விரக்தியான சூழ்நிலையில், சார்ந்து கொள்ள யாருமே இல்லாமல், கஷ்டத்தின் ஆழத்திற்கு நாம் சென்று விடும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானம் என்னும் வியத்தகு வளத்தை தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவர் சொல்வதைக் கேட்பதற்கு நம் இருதயம் திறந்ததாகவும், அவர் சொல்வதைச் செய்வதற்கு நம்மை அர்ப்பணித்தவர்களாகவும் இருக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், யாருடன் செய்ய வேண்டும் என்பதை அவர் சரியாகக் காண்பிப்பார். அவருடைய ஞானம் நாம் கேட்க நினைத்த விதத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு அப்படியே கீழ்ப்படிய நம்மை நாம் அர்ப்பணிக்கும்போது, அவர் நமக்கு அதை உதாரத்துவமாகக் கொடுப்பார்.
கர்த்தர் கொடுக்கும் வளத்தை இன்றே ஏற்றுக் கொள்ளுங்கள். அவரிடம் ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள், உங்கள் கண்களையும், காதுகளையும், இருதயத்தையும் திறந்து வையுங்கள். அவர் எப்படி இடைபடுகிறார் என்பதைக் காண்பீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இவ்வுலக வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது. நீங்கள் கூட தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து, “ஏன்?” என்றோ அல்லது “இதிலிருந்து நான் எப்படித் தப்பிப் பிழைப்பேன்?” என்றோ கேட்டுக் கொண்டிருக்கலாம். யாக்கோபு புத்தகத்தில் இதற்கான பதில்கள் உண்டு! இந்த ஐந்து-நாள் வாசிப்புத் திட்டத்தில், தப்பிப் பிழைக்கும் கலையை அறிந்து, கடினமான நேரங்களிலும் எவ்வாறு தேவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதைப் பற்றி சிப் இங்ராம் பகிர்ந்து கொள்கிறார்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜ்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/product/art-of-survival-book/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு புதிய ஆரம்பம்

சீடத்துவம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
