தப்பிப் பிழைக்கும் கலைமாதிரி
![தப்பிப் பிழைக்கும் கலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F32760%2F1280x720.jpg&w=3840&q=75)
மகிழ்ச்சிக்கு ஒரு காரணம்
நாம் கடினமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகெங்கும் மனிதர்கள் சோதனைகளையும், உபத்திரவங்களையும் சந்தித்து வருகிறார்கள். ஒருவேளை நீங்களும் கூட இவற்றைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் எத்தனை காலமாக கிறிஸ்தவராக இருந்திருந்தாலும், உங்கள் விசுவாசம் ஏன் இப்படி முறிந்து போகும் அளவிற்கு சோதிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
நாம் கிறிஸ்துவுக்குள் ஜெயங்கொள்கிறவர்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது நாமறிந்ததே. ஆனால், ஒருசிலருக்கு எப்படி மேற்கொள்வது என்பதல்ல, எப்படித் தப்பிப் பிழைப்பது என்பதே கேள்வியாக இருக்கிறது.
துன்பப்படும் சபைக்கு உதவுவதற்காகவே யாக்கோபு நிருபம் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவின் சகோதரரால் எழுதப்பட்ட இந்த நிருபம், உபத்திரவத்தினால் சிதறடிக்கப்பட்டு, அதிர்ந்து போய், மிக அதிகமான கஷ்டங்களை எதிர்கொண்ட விசுவாசிகளுக்காக எழுதப்பட்டது. இன்றுள்ள அநேகரைப் போல அவர்களும் எப்படித் தப்பிப் பிழைப்பது என்பதை அறிய வேண்டியதாயிருந்தது.
யாக்கோபின் போதனையை நான் தப்பிப் பிழைக்கும் கலை என்கிறேன்.
கொண்டிருக்க வேண்டியதொரு மனப்பான்மை, கேட்க வேண்டியதொரு வளம், மற்றும் விளங்கிக் கொள்ள வேண்டியதொரு இறையியலை அவர் நமக்குக் காண்பிக்கிறார்.
அந்த மனப்பான்மையைக் கொண்டிருந்து, அந்த உதவியைப் பெற்று, சரியான கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் பார்க்கக் கற்றுக் கொள்ளும்போது, எவ்வித கடினமான சூழ்நிலையையும் நாம் திடமனதுடன் எதிர்கொள்ளலாம்.
யாக்கோபின் போதனைகளைப் பார்க்கத் தொடங்கும் முன்னர், ஒருசில சத்தியங்களை நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்வோம்.
சோதனைகள் தவிர்க்க முடியாதவை.
வீழ்ந்து போன உலகில் கஷ்டம் என்பது நிச்சயம் (1 பேதுரு 4:12 மற்றும் 2 தீமோத்தேயு 3:12 பார்க்கவும்). ஆனால், தேவகிருபையினால் நம்மால் அதை மேற்கொள்ள முடியும் (யோவான் 16:33).
சோதனைகள் நம்மை உருவாக்குகின்றன அல்லது உடைக்கின்றன.
வேதாகமம் முழுவதும், தங்கள் மிகக் கடினமான நேரங்களில் விசுவாசிக்கத் தெரிந்து கொண்டவர்களாலும், சமரசம் செய்து மனம் தளர்ந்து விட்டு விட்டவர்களாலும் நிறைந்துள்ளது. பாடுகள் மனிதர்களை தேவனை விட்டு விலகச் செய்கின்றன, அல்லது அவரிடம் நெருங்கச் செய்கின்றன.
“ஏன்” என்னும் கேள்வியில் சிக்கிக் கொண்டவர்கள் தங்கள் வேதனைக்கு பலியாகிறார்கள்.
“ஏன்” என்ற கேள்விகளைக் கேட்பது இயல்பானதுதான் என்றாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் அதைத் தாண்டிச் செல்வதில்லை. தேவன் மீது நம்பிக்கை வைப்பதே வெற்றிகரமாகத் தப்பிப் பிழைத்திருப்பதற்கான முதல் படி.
அடுத்த சில நாட்களில், நாம் கஷ்டங்களிலேயே மூழ்கியிருக்க மறுத்து, தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொள்வோம்! யாக்கோபு நிருபத்தில் தேவன், நடைமுறைக்கேற்ற வல்லமையான மற்றும் வாழ்க்கை மாற்றும் படிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குழப்பமான உலகில் நாம் நித்தியத்துடன் இணைந்திருக்கத் தேவையான அனைத்தையும் அவை நமக்குக் கொடுக்கின்றன. இப்போது, தப்பிப் பிழைக்கும் கலையைப் பற்றிப் பார்ப்போம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![தப்பிப் பிழைக்கும் கலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F32760%2F1280x720.jpg&w=3840&q=75)
இவ்வுலக வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது. நீங்கள் கூட தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து, “ஏன்?” என்றோ அல்லது “இதிலிருந்து நான் எப்படித் தப்பிப் பிழைப்பேன்?” என்றோ கேட்டுக் கொண்டிருக்கலாம். யாக்கோபு புத்தகத்தில் இதற்கான பதில்கள் உண்டு! இந்த ஐந்து-நாள் வாசிப்புத் திட்டத்தில், தப்பிப் பிழைக்கும் கலையை அறிந்து, கடினமான நேரங்களிலும் எவ்வாறு தேவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதைப் பற்றி சிப் இங்ராம் பகிர்ந்து கொள்கிறார்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜ்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/product/art-of-survival-book/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55580%2F320x180.jpg&w=640&q=75)
எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)