தப்பிப் பிழைக்கும் கலைமாதிரி

விளங்கிக் கொள்ள வேண்டியதொரு இறையியல்
ஒருமுறை நான் ஹாங்காங் தேசத்தில் சில போதகர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வீட்டுச் சபைப் போதகர், தன் வீட்டில் சபை கூடி வந்த நிலையில், ஒருமுறை தான் ஊரில் இல்லாத சமயத்தில், கம்யூனிஸ கட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் தன் வீட்டை பரிசோதனை செய்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனைவி எல்லோரையும் மெதுவாகப் போகச் சொல்லிவிட்டு, அந்த அதிகாரிகளிடம், தாம்தான் அங்கு போதகர் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் அந்தப் ஊழியக்காரப் பெண்மணியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, இரண்டு நாட்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
அதைக் கேட்ட எனக்கு கோபம் பீறிட்டது. என் மனைவியை யாராவது அப்படி செய்தால் நான் எப்படி நடந்து கொள்வேன்? என்று நினைத்தேன். ஆனால், அந்தப் போதகரோ, “தமக்காகப் பாடுபட தேவன் நம்மைத் தகுதியுள்ளவர்களாகக் கருதுவார் என்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?” என்று கேட்டுத் தன் கதையை முடித்தார்.
பாடுகளின்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது, தேவனுடைய சுபாவம் மற்றும் அவர் நம் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதைப் பற்றிய நம் சொந்த எண்ணங்களைக் கொண்ட நம்முடைய இறையியலைப் பற்றிச் சொல்கிறது. ஒருவேளை நாம் சோர்ந்து போவோமென்றால், நம்மிடமிருப்பது தவறான இறையியலாக இருக்கலாம்.
சோர்வு என்பது சத்துருவின் மிகப்பெரிய கருவிகளில் ஒன்று. அது நம் தைரியத்தை அரித்து, எதுவுமே ஒருபோதும் மாறப்போவதில்லை என்பது போல மனம் தளர்ந்து போகச் செய்கிறது. முயற்சி செய்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? என்னும் மனப்பான்மை சமரசம் செய்துவிடும், மற்றும் மனம் தளர்ந்து விட்டுவிடுவதுதான் எதார்த்தமான முடிவு என்பது போலத் தோன்றும்.
ஆனால், தேவன் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார், மற்றும் எப்படி நம் எதிர்காலத்தைத் தம் கைகளில் வைத்திருக்கிறார் என்னும் தெய்வீகக் கண்ணோட்டமாகிய ஒரு வித்தியாசமான இறையியலை தேவன் நமக்குக் கொடுக்கிறார். இந்தக் கண்ணோட்டத்தை நாம் புரிந்து கொள்ளும்போது, சோர்வு தன் வல்லமையை இழக்கிறது.
இன்று நீங்கள் சோர்ந்து போயிருக்கிறீர்களா? தேவனுடைய இறையியல் என்னும் அவருடைய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்:
·உங்கள் சூழ்நிலைகள்:
விசுவாசக் கண்களால் உங்கள் சூழ்நிலைகளை நோக்கிப் பாருங்கள். அவை, தற்போதைக்கும் நித்தியத்திற்குமான விலையேறப்பெற்ற திறமையாகிய தேவனைச் சார்ந்திருக்கும் நிலையில் உங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.
·உங்கள் எதிர்காலம்:
நம்பிக்கையின் கண்களால் உங்கள் எதிர்காலத்தை நோக்கிப் பாருங்கள். நீங்கள் இயேசுவுக்குள் விசுவாசிகளாக இருப்பீர்கள் என்றால், தேவையற்ற வேதனையான சூழ்நிலைகள் வழியாக ஒருபோதும் கடந்து செல்லமாட்டீர்கள்.
·உங்கள் உற்சாகம்:
அவரை நேசிக்கிற யாவருக்கும் ஜீவகிரீடம் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது என்னும் உற்சாகமூட்டும் காரியம் நம்முடைய தரிசனத்தை நித்தியத்துடன் இணைக்கிறது. அன்பினிமித்தம் செய்தோமென்றால் நம்மால் எதையும் மேற்கொள்ள முடியும்.
இன்று, யாக்கோபு நிருபத்திலுள்ள வேதப்பகுதியை தியானித்து, தேவனுடைய வளங்களை அவரிடம் தைரியமாகக் கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இவ்வுலக வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது. நீங்கள் கூட தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து, “ஏன்?” என்றோ அல்லது “இதிலிருந்து நான் எப்படித் தப்பிப் பிழைப்பேன்?” என்றோ கேட்டுக் கொண்டிருக்கலாம். யாக்கோபு புத்தகத்தில் இதற்கான பதில்கள் உண்டு! இந்த ஐந்து-நாள் வாசிப்புத் திட்டத்தில், தப்பிப் பிழைக்கும் கலையை அறிந்து, கடினமான நேரங்களிலும் எவ்வாறு தேவனுடைய சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதைப் பற்றி சிப் இங்ராம் பகிர்ந்து கொள்கிறார்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜ்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/product/art-of-survival-book/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு புதிய ஆரம்பம்

சீடத்துவம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
