ஜெபத்தில் தேவனோடு பேசுதல்மாதிரி
தேவனுக்காய் ஏங்குதல்
தேவனிடம் பேசுதல்
தேவன் நம்மை நேசிப்பதற்காகவும், ஜெபத்தின் மூலம் நாம் அவரோடு பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறதற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்படு அவரிடம் கேளுங்கள்.
உள்ளே மூழ்குதல்
மூன்று தொகுப்புகளாக குறிப்பெழுதும் அட்டைகளை எடுத்துக்கொண்டு அவைகளில் பின்வரும் வார்த்தைகளை/வசனங்களை எழுதவும்: தாத்தா/பாட்டி, நெருங்கிய நண்பர், உங்கள் போதகர், மளிகை கடை எழுத்தர் மற்றும் அண்டை வீட்டாரின் உறவு. நீங்கள் இவர்களுடன் பேசிப்பழகும் அளவிற்கு ஏற்ப அவற்றை வரிசைப்படுத்தவும், அதாவது மிக அதிகமாய் பேசுபவரை முதல் அட்டையாகவும், மிகக் குறைவாக பேசுபவரை கடைசியாகவும் வரிசைப்படுத்தவும். இரண்டாம் தொகுப்பையும் இதே போல், நீங்கள் அதிகமாய் சுற்றி இருக்க விரும்புகிறவரை முதல் அட்டையாக வைக்கவும். மூன்றாவது தொகுப்பில் நீங்கள் அதிகமாக தேடும் நபரை முதலில் வைத்து, அதை மற்ற இரண்டு தொகுப்புகளின் அருகில் வைக்கவும். உங்கள் பட்டியல்கள் எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதை ஒப்பிட்டுப்பாருங்கள்.
ஆழமாக செல்லுதல்
உங்களை நேசித்து உங்களுக்கு மிகச்சிறந்ததையே கொடுக்க விரும்பும் தேவனிடம் பேசுவதே ஜெபம். நீங்கள் எப்படி உங்களுக்கு பிரியமான ஒருவருக்காக ஏங்குகிறீர்களோ அதுபோல் நீங்கள் தேவனிடம் பேசாமல் இருக்கும்போது உங்கள் ஆவி அவருக்காக ஏங்குகிறது. தேவனோடு கூட இருக்க வேண்டும் என்று ஏங்குவது, தாகம் மற்றும் பசி போன்ற உணர்வுகளுக்கு ஒப்பானது என்று வேதம் சொல்கிறது. சங்கீதம் 42:1-2 ஐ வாசியுங்கள்: "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" மானானது தாகமாய் இருக்கும்போது நீரோடையை கண்டடைவதுபோல நாம் ஜெபத்தில் தேவனை கண்டடைய முடியும்.
ஒருவரோடு ஒருவர் பேசுதல்
-நீங்கள் பசியாகவோ அல்லது தாகமாகவோ இருக்கும்போது எதைப்பற்றி யோசிக்கிறீர்கள்?
-நீங்கள் தேவனோடு இருப்பது, நீங்கள் நேசிக்கும் ஒரு நபரோடு இருப்பதற்கு எவ்வாறு ஒத்திருக்கிறது? அது எப்படி வேறுபடுகிறது?
-உங்கள் ஆவி தேவனுக்காக தாகமாய் இருக்கிறது என்பதை எப்படி அறிவீர்கள்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
குடும்ப வாழ்க்கையின் ஓயாத வேலைகளால் நாம் ஜெபம் செய்வதற்கு நேரம் செலவழிக்காமல், நம் பிள்ளைகளுக்கும் தேவனை தங்கள் நாளின் ஒரு பங்காக சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க நாம் உதவிசெய்ய நினைப்பதில்லை. இந்த திட்டத்தின் மூலம், உங்கள் குடும்பம் தேவன் எவ்வளவாய் உங்கள் கூப்பிடத்தலை கேட்க விரும்புகிறார் என்பதையும், ஜெபமானது தேவனோடு உள்ள உறவையும், நாம் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறவையும் எவ்வளவாய் பலப்படுத்துகிறது என்பதையும் காண்பீர்கள். ஒவ்வொரு நாளுக்கும் உரிய திட்டத்தில் ஒரு ஜெப வழிமுறை, சுருக்கமான விளக்கவுரையுடன் கூடிய வேத வாசிப்பு, செய்முறைகள் மற்றும் விவாத கேள்விகள் ஆகியவை அடங்கியுள்ளன.
More
இந்த திட்டத்தை வழங்கும் Focus on the Family-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.FocusontheFamily.com - க்கு செல்லவும்.