திட்ட விவரம்

ஜெபத்தில் தேவனோடு பேசுதல்மாதிரி

Talking With God In Prayer

4 ல் 2 நாள்

ஜெபத்தில் தேவனை துதித்தல்

தேவனோடு பேசுதல்
உங்களை படைத்ததற்காகவும், உங்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம் மற்றும் நேசிக்கிற மக்கள் யாவருக்காகவும் கர்த்தரைத் துதியுங்கள்.

உள்ளே மூழ்குதல்
நீங்கள் நன்றிசெலுத்தக் கூடிய காரியங்களை பற்றி யோசியுங்கள். அவற்றுள் பத்து காரியங்களை பட்டியலிடுங்கள். யாரிடத்திலாவது நீங்கள் ஏன் இந்த காரியங்களுக்காக நன்றி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்று தெரியப்படுத்தி, தேவன் அருளிய எல்லா நன்மைகளுக்காகவும் அவரை துதியுங்கள்.

ஆழமாக செல்லுதல்
அன்றாட வாழ்வின் ஆசீர்வாதங்களுக்காகச் சுருக்கமான ஜெபங்கள் மூலம் ஜனங்கள் தேவனைத் துதிக்கவும், நன்றியைத் தெரிவிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். காலையில் கண்விழித்தவுடனே "என் கண்களுக்காகவும், என் பார்வைக்காகவும் நன்றி சொல்லுகிறேன் கர்த்தாவே" என்று ஜெபிக்கலாம். உடைகளை உடுத்தும்போது இப்படியாக ஜெபிக்கலாம் "உடுத்துவதற்கு ஆடைகளை தந்து என்னுடைய தேவைகளை சந்திக்கிறதற்காய் நன்றி கர்த்தாவே". சூரியன் உதிப்பதைப் பார்க்கும்போது, நீங்கள் இப்படடியாக சொல்லலாம் "தேவனே நீர் மிகவும் பெரியவர்! உம்முடைய படைப்பிற்காய் நன்றி." சங்கீதம் 145 இன் முதல் இரண்டு வசனங்கள் தேவனை துதிப்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாய் உள்ளன: "ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்."
இன்றைய தினமும் ஒவ்வொருநாளும் தேவனைத் துதியுங்கள்!

ஒருவரோடு ஒருவர் பேசுதல்
-தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டது உங்களுடைய மனப்பான்மையை எவ்வாறாக மாற்றியது?
-தேவன் அருளிய எல்லா நன்மைகளுக்கும் நீங்கள் துதித்தீர்களானால் எவ்வளவு காலம் ஆகும்?
-தேவனைத் துதிப்பது உங்களை எவ்வாறாக மாற்றியது?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Talking With God In Prayer

குடும்ப வாழ்க்கையின் ஓயாத வேலைகளால் நாம் ஜெபம் செய்வதற்கு நேரம் செலவழிக்காமல், நம் பிள்ளைகளுக்கும் தேவனை தங்கள் நாளின் ஒரு பங்காக சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க நாம் உதவிசெய்ய நினைப்பதில்லை. இந்த திட்டத்தின் மூல...

More

இந்த திட்டத்தை வழங்கும் Focus on the Family-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.FocusontheFamily.com - க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்