ஜெபத்தில் தேவனோடு பேசுதல்மாதிரி

Talking With God In Prayer

4 ல் 1 நாள்

தேவன் உங்களுக்காக ஏங்குகிறார்

தேவனிடம் பேசுதல்
அனைத்து வழிகளிலும் உங்களை நேசித்து உங்கள் மேல் அக்கரை உள்ளவராய் இருப்பதற்காய் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். தினந்தோறும் நீங்கள் அவரிடம் பேசவேண்டும் என்பதை எவ்வளவாய் விரும்புகிறார் என்பதை உங்களுக்கு காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

உள்ளே மூழ்குதல்
சமையலறையின் கழுவுதொட்டியின் அருகில் சிறிய கண்ணாடி குவளைகளை அடுக்கவும். ஒன்றன்பின் ஒன்றாக தண்ணீரால் அவற்றை நிரப்பவும். வீட்டிலுள்ள அனைத்து பாத்திரங்களையும் தண்ணீரால் நிரப்பினாலும், தண்ணீர் குழாயில் தண்ணீர் வந்துகொண்டே இருப்பதைப்பற்றி விவாதிக்கவும். அதேபோல் தேவன் நம்மேல் கொண்டுள்ள தாகம் என்றும் குறையாதது.

ஆழமாக செல்லுதல்
நீங்கள் எப்பொழுதும் கிட்டிச்சேர கூடியவராய் தேவன் இருக்கிறார். குழாயை திறந்து மற்றொரு குவளையை தண்ணீரால் நிரப்புவதுபோல, தேவனுடைய பிரசன்னத்தை நாம் ஜெபத்தின் மூலம் அனுபவிக்கலாம். ஏசாயா 30:18 ஐ வாசியுங்கள்: "ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்."
அவர் உங்களுக்கு மிகச்சிறந்ததையே கொடுக்க விரும்புவதால், நீங்கள் அவரை இன்னும் அதிகமாய் கிட்டிச்சேர்ந்து அவருடைய அன்பையும் சமாதானத்தையும் பெறலாம். தேவன் உங்கள் சார்பாக செயல்பட்டாலும், நம்முடைய வாழ்வை அவருடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும்படி அவரிடம் பதிலளிக்க விரும்புகிறார். இதை செய்வதற்கான ஒரு வழி அவரோடு தினமும் பேசுவதாகும்.

ஒருவரோடு ஒருவர் பேசுதல்
-உங்களுக்கு பேசுவதற்கு மிகவும் பிடித்தமான நபர் யார்? எது அவரை உங்களுக்கு பிடித்தவராக மாற்றியது?
-நீங்கள் உண்மையிலேயே இந்த நபருடன் பேசவிரும்பிய நேரத்தை பற்றி சொல்லுங்கள்? எதற்காக அவரிடம் பேச ஏங்கினீர்கள்?
-தேவன் ஏன் உங்களிடம் கிருபை உள்ளவராக இருக்க ஏங்குகிறார்?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Talking With God In Prayer

குடும்ப வாழ்க்கையின் ஓயாத வேலைகளால் நாம் ஜெபம் செய்வதற்கு நேரம் செலவழிக்காமல், நம் பிள்ளைகளுக்கும் தேவனை தங்கள் நாளின் ஒரு பங்காக சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க நாம் உதவிசெய்ய நினைப்பதில்லை. இந்த திட்டத்தின் மூலம், உங்கள் குடும்பம் தேவன் எவ்வளவாய் உங்கள் கூப்பிடத்தலை கேட்க விரும்புகிறார் என்பதையும், ஜெபமானது தேவனோடு உள்ள உறவையும், நாம் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறவையும் எவ்வளவாய் பலப்படுத்துகிறது என்பதையும் காண்பீர்கள். ஒவ்வொரு நாளுக்கும் உரிய திட்டத்தில் ஒரு ஜெப வழிமுறை, சுருக்கமான விளக்கவுரையுடன் கூடிய வேத வாசிப்பு, செய்முறைகள் மற்றும் விவாத கேள்விகள் ஆகியவை அடங்கியுள்ளன.

More

இந்த திட்டத்தை வழங்கும் Focus on the Family-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.FocusontheFamily.com - க்கு செல்லவும்.