தேவ இராஜ்ஜியத்தின் வழிகள்மாதிரி

The Way of the Kingdom

5 ல் 1 நாள்

பிறரால் மனக்காயப்பட்டிருக்கிறீர்களா? t

யோவான் ஸ்நானகன் தன் வாலிப வயதில் பெரும்பாலும் மேசியாவின் வருகையை அறிவித்து வந்தார். யோவான் ஸ்நானகன் இயேசுவின் உறவினர், தங்கள் இருவரின் பிறப்பு சம்பந்தப்பட்ட அதிசயங்கள் அவர்களுக்குத் தெரியும். இப்பொழுது, முழுமையாக தங்கள் தங்கள் ஊழியங்களை செய்து கொண்டிருக்கும் வேளையில், இயேசுவும் யோவான் ஸ்நானகனும் தேவ ராஜ்ஜியம் சமீபமாயிற்று என்று தைரியமாய் அறிவித்து வந்தனர். இருவரும் ஒருமித்த கருத்துடையோராய் இருந்தனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக, யோவான் ஸ்நானகன் "நீர் தான் மேசியாவா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா" என இயேசுவிடம் கேட்டு வரும்படி தன் சீஷர்களை அனுப்பினார். ஏன் யோவான் ஸ்நானகனுக்குத் தெரியாதா? வசனங்களைப் படிக்கையில் யோவானுக்குத் தெரியும் போல் தான் தோன்றுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் அவர் சற்று குழப்பத்தில் இருப்பதாக தோன்றுகிறது. 

யோவான் ஸ்நானகன், தன் காலத்தில் இருந்த அரசியல், மதம், கலாச்சார சூழலைத் தூக்கி எரியும் புரட்சியாளரை எதிர்பார்த்தார். யோவான் ஸ்நானகன், மேசியா பிதாவினால் வழி நடத்தப்பட்டு நீதியின் எழுச்சியை கிளர்ச்சியை உருவாக்குவார் என நம்பினார். ஆனால் அவர் இப்போது எங்கே இருந்தார்? சிறையில் சங்கிலிகளால் பிணைபட்டிருந்தார், அநீதியான, விபச்சாரக்காரனான ஏரோதின் கையால் துன்புற்றுக் கொண்டிருந்தார். இதைக் குறித்து இயேசு என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை.

இயேசு தான் எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்றால், அவர் தனது ராஜ்யத்தை நிறுவி, சமூக, அரசியல் ஒடுக்குமுறையாளர்களை அகற்ற நடவடிக்கை எடுத்து, மத ரீதியான உயரடுக்கினரிடையே சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்து, நீதியுள்ள, தெய்வீகத்தால் நியமிக்கப்பட்ட அரசராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மாட்டார்? அவர் அநீதியை பொறுக்காத தேவன் அல்லவா? யோவான் ஸ்நானகனின் சிறை வாசத்தில் தலையிட மாட்டாரா? யோவான் ஸ்நாகனின் எதிர்பார்ப்புகளின்படி, பதில் ஆம் என்று இருந்திருக்கும். 

ஆனால் உண்மை வேறாக இருப்பதால் மனதளவில் காயப்படாமல் இருக்கும்படி யோவான் ஸ்நாகனை இயேசு எச்சரித்தார். யோவான் ஸ்நானகன் அவமதிப்பு, அநீநி, காயத்தின் மத்தியிலும் இயேசுவை விசிவாசிக்க வேண்டியதாயிருந்தது. யோவான் ஸ்நானகனுக்கு விடுதலையில்லை. அவனுடைய கலைந்த எதிர்பார்ப்புகள் அவனுக்கு குழப்பத்தை, சந்தேகத்தை ஏற்படுத்தியது, அவிசுவாத்திற்கு இழுத்தது. அந்த சூழலில்தான் இயேசு அவனை விசுவாசத்திற்கு அழைத்தார்.

சந்திக்கப்படாத நமது எதிர்பார்ப்புகள், எதிர்ப்பின் கூர் முனையில், அநீதியின் நேரத்தில் தேவன் மீது கோபம் கொள்கிறோம்? அவரது அன்பை, நன்மையை, உண்மையை, அவருடைய இருப்பை, யதார்தத்தை சந்தேகித்திருக்கிறோம். இதனால் எத்தனை பேர் இயேசுவை விட்டு பின்வாங்கினர்? இப்படி தான் ஆவியானவரின் அசைவாடுதலை தடுக்கிறோம். 

தேவனுடைய மற்றொரு பெரிய அசைவாடுதலின் சரிவில் இருக்கிறோம். நாம் தேவராஜ்ஜியத்தின் பாதையில் நடந்து, இந்த தலைமுறையின் தேவ அசைவாடுதலில் இணைய, நாம் மற்றோரால் காயப்படுத்த முடியாதவர்களாய் இருக்க வேண்டும். 



நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Way of the Kingdom

தேவன் தமது திருச்சபையை எழுப்புகிறார், எழுப்பதலை ஊற்றுகிறார். நாம் விரிந்த மனப்பான்மையோடு அதனை நோக்க வேண்டும். இது போன்ற கடினமான நேரங்களில், தப்பித்து விட ஆசைப்படுவோம். இருப்பினும், இது விலகி ஓடுவதற்கான நேரம் அல்ல. நாம் இருக்கும் காலத்தை புரிந்து, இக்காலத்தில் தேவ ராஜ்யத்தை எவ்வாறு நிலைநிறுத்துவதில் எப்படி முன்னேறலாம் என்பதற்கான உத்திகளைப் பெறுவதற்கு எங்களுடன் இணையுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் பதிப்பகத்தாருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://bakerpublishinggroup.com/books/the-way-of-the-kingdom/395661/ஐ பார்வையிடுங்கள்