தேவ இராஜ்ஜியத்தின் வழிகள்மாதிரி
வேதனையில் அமைதி, துன்பத்தில் தைரியம்
தேவன் தன்னை அழைத்த அழைப்பில் நடக்கும் எந்த ஒரு விசுவாசியும் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை, துன்புறுத்தலை சந்திப்பார்கள். இது புதிதல்ல. சபையின் தொடக்கத்தில் இருந்தே கிறிஸ்தவர்களை துன்புறுத்துதல் என்பது இருந்து வருகிறது. நாம் இந்த உலகில் இப்போது அனுபவிப்பவை தேவ ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு அடையாளம். இது எதுவுமே தேவனுக்கு அதிர்ச்சிகரமானது அல்ல. இயேசு தன்னுடைய வாழ்வில் இதனை எதிர்பார்த்தார், அவருக்கு தெரியும் தான் இவ்வுலகில் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிப்போம் என்று. ஆவியானவரை நமக்கு தந்தருளியது மூலமாக இதுபோன்ற துன்ப காலங்களில் நமக்கு தேவையான அனைத்தையும் தந்திருக்கிறார்.
நாம் கேட்க வேண்டிய கேள்வி துன்பங்கள் துயரங்கள் வருமா என்பதல்ல. அது வரும். நம் கேட்க வேண்டிய கேள்வி அந்த துன்ப துயரங்களுக்கு நமது பதில் என்ன என்பதே. நாம் ஒரு மேட்டின் பின் ஒளிந்துகொள்ளலாமா, நம் தலையை மணலில் புதைத்துக் கொள்ளலாமா? அல்லது தான்தோன்றித்தனமாக ஏதாவது ஒரு வழியில் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாமா? நாம் தற்காப்புக்கு ஆளாகிறோமா, பழிவாங்கும் சதித்திட்டம் தீட்டி நீயா-நானா என்ற மனநிலையில் வாழ்வோமா? இல்லை இது தேவராஜ்யத்தின் வழி அல்ல.
நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம், சமாதானத்தின் பிரபுவாகிய கிறிஸ்து ஆவியின் வரங்களாக நமக்குள் இருக்கிறார். உலகம் நடுங்கும்போதும், அதிர்ந்து ஒடுங்கும்போதும், நிலைத்து, அசையாது, நடுங்காமல், இயேசுவில் வேரூன்றி, அடித்தளமாக இருக்க, தேவன் கொடுத்த அதிகாரத்தில் நடக்க கிறிஸ்துவின் அமைதி நமக்கு உதவுகிறது. நம்முடைய நித்தியம் பாதுகாப்பானது, நமது அதிகாரம் உறுதியானது என்பதை நாம் அறிந்திருப்பதால் இதைச் செய்ய முடிகிறது. கர்த்தர் நம் பக்கம் இருக்கிறார். கிறிஸ்துவின் சமாதானம் நம்மைச் சுற்றியுள்ள துன்புறுத்தலை விட வலிமையானது.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் ராஜ்யத்திற்காக நமது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். நாம் விலைக் கிரயம் கொடுக்க தயாராக இருக்கும் மன நிலைக்கு வர வேண்டும். சுய-பாதுகாப்புக்கான ஆர்வம் மக்களை அவர்களின் தார்மீகத்தையும் தனிப்பட்ட நேர்மையையும் சமரசம் செய்யும் முடிவுகளை எடுக்க தூண்டும். அவர்கள் தங்களுக்குச் சரியென்று தெரிந்ததைச் செய்வதில்லை, செய்ய முடிவதில்லை அல்லது சாதாரண சூழ்நிலையில் அவர்கள் செய்ய விரும்பாததைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பாவம் மன்னிக்கப்பட்டது. மரணத்தை தேவன் வென்றுவிட்டார். சாத்தான் கீழே தள்ளப்பட்டான். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார். தேவனுடைய ராஜ்யம் முன்னேறுகிறது. இயேசு வெற்றியை உறுதிசெய்தார், நித்திய ஜீவனை வாக்களித்துள்ளார், அவருடைய சமாதானத்தை அளித்தார் மற்றும் அழைப்பு மற்றும் ஆணையை வழங்கினார். துன்பங்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டாலும், நாம் அச்சமின்றி இருக்க முடியும் அல்லவா?
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் தமது திருச்சபையை எழுப்புகிறார், எழுப்பதலை ஊற்றுகிறார். நாம் விரிந்த மனப்பான்மையோடு அதனை நோக்க வேண்டும். இது போன்ற கடினமான நேரங்களில், தப்பித்து விட ஆசைப்படுவோம். இருப்பினும், இது விலகி ஓடுவதற்கான நேரம் அல்ல. நாம் இருக்கும் காலத்தை புரிந்து, இக்காலத்தில் தேவ ராஜ்யத்தை எவ்வாறு நிலைநிறுத்துவதில் எப்படி முன்னேறலாம் என்பதற்கான உத்திகளைப் பெறுவதற்கு எங்களுடன் இணையுங்கள்.
More