தேவ இராஜ்ஜியத்தின் வழிகள்மாதிரி

The Way of the Kingdom

5 ல் 5 நாள்

நீங்கள் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறீர்கள்

கலாச்சாரத்தில் சில பயங்கரமான தவறு இருப்பது நமக்ஸகுத் தெரியும். அதின் அறிகுறிகளை நாம் காண்கிறோம்: இனவெறி, பிரிவு, வன்முறை, பாலியலுக்காக கடத்தப்படுதல், போதை பொருட்களுக்கு, ஆபாசபடங்கள் போன்றவற்றிற்கு அடிமையாதல், தனிமை போன்றவை. நாம் உலகில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடுகிறோம், மாறாக அது செயலிழந்ததையும் ஏமாற்றத்தையும் காண்கிறோம். நீதி கிடைக்கவும், வறுமை மற்றும் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்படவும் அரசாங்கத் தலைவர்களை எதிர்பார்க்கிறோம்.

தன்னைத் தான் நேசிப்பதும், தனக்கு உரிமை இருப்பதாக நினைப்பதும் நமது கலாச்சாரமாக இன்று மாறிவிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகம் தன்னை நேசிக்கிறது. சுய-அன்பு மனிதகுலத்தின் நோய்களைக் குணப்படுத்த முடியாது, ஏனென்றால் அது புலம்பலைக் கேட்கவும் பதிலளிக்கவும் முடியாது, ஒருவரின் துன்பத்தில் ஆறுதல் தர இயலாது, ஒருவரின் துக்கம் மற்றும் தனிமையில், ஒருவரின் பிரச்சனையில், ஒருவரின்  நம்பிக்கையின்மையில் நங்கூரமாக அல்லது பிரிவின் பாலமாக இருக்க முடியாது. சுய-அன்பு இரக்கத்தையோ, பரிவையோ அல்லது ஓய்வையோ வழங்க முடியாது. சுயமறுப்பு, தன்னம்பிக்கை,சுயவிருப்பம், தியாகம் மட்டும் போதாது. தரிசனமும் ஆர்வமும் மட்டும் போதாது. 

உண்மையான, சுயத்தை தியாகம் செய்த அன்புதான் உந்துதலாகவும் அடித்தளமாகவும் இருக்க வேண்டும். இந்த அன்பு மற்ற எல்லாக் காதல்களையும்—சுய அன்பு, புகழின் மீதான காதல், வெற்றியின் மீதான ஆசை, பணத்தின் மீதுள்ள ஆசை, அதிகாரத்தின் மீதுள்ள ஆசை மற்றும் இன்பத்தின் மீதான நாட்டம் ஆகியவற்றைத் தள்ளி வைக்கிறது. தேவனையோ பிறரையோ நேசிக்காமல், நம்மால் சுயத்தை வெறுக்க முடியாது. நாம் தேவன் மீது உண்மையான மற்றும் தீவிரமான அன்பைக் கொண்டிருக்கும் போது, ​​நாம் விருப்பத்துடன், வெறுப்பு இல்லாமல், மற்றவர்களுக்காக நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியும்.

கிறிஸ்துவின் தியாக அன்பு, நமக்குள்ளும் நமது மூலமாகவும், நம் கலாச்சாரத்தை பாதிக்கும் நோய்களுக்கான மருந்தாகிறது. ராஜ்யத்தின் வழியில் பதிலளிக்கும் ராஜ்ய மக்களாக இருக்க நம்மை கட்டாயப்படுத்தும் உந்துதல் அதுதான். இயேசுவைப் போல நாமும் நேசிக்கும்போது, ​​அவர் செய்தது போல் தியாகம் செய்ய தயாராகிறோம்.

அன்பினால் தூண்டப்பட்டு, கிருபையால் அதிகாரம் பெற்றுள்ளோம், மேலும் மனிதகுலத்தை அடிமைப்படுத்தும் இருண்ட சக்திகளுக்கு எதிராக ராஜ்யப் போரைச் செய்ய ஆக்ரோஷமான விசுவாசத்தில் நடக்கிறோம். இயேசுவைப் போலவே நாமும் ராஜ்யத்தின் வாழ்க்கை முறையை வாழ்கிறோம். இயேசுவும் அவருடைய சுவிசேஷமும் பதில். அவருடைய மக்களாகிய நம்மிடம்தான் இந்த சமுதாயத்தினை நோய்களுக்கான மருந்து உள்ளது.

நீங்கள் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறீர்கள் மேலும் நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள், அவர் உங்கள் பணியைச் செய்ய உங்களுக்கு உதவுவார். உங்கள் பணிக் களம் உங்கள் குடும்பம், சுற்றுப்புறம் மற்றும் நகரம். நீங்கள் எங்கு சென்றாலும், மக்கள் குணமடையவும், விடுவிக்கப்படவும், தேவ வார்த்தையால் ஊக்கப்படுத்தப்படவும், இரட்சிப்பின் மூலம் ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படவும் காத்திருக்கிறார்கள். ராஜாவுக்கு சேவை செய்வதற்கும் அவருடைய ராஜ்யத்தை முன்னேற்றுவதற்கும் உங்கள் பங்கைச் செய்வீர்களா? 

இந்தத் திட்டத்தை வேறொரு ஆதாரத்திலிருந்து மாற்றியமைத்தோம், மேலும் அறிய http://bakerpublishinggroup.com/books/the-way-of-the-kingdom/395660



நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Way of the Kingdom

தேவன் தமது திருச்சபையை எழுப்புகிறார், எழுப்பதலை ஊற்றுகிறார். நாம் விரிந்த மனப்பான்மையோடு அதனை நோக்க வேண்டும். இது போன்ற கடினமான நேரங்களில், தப்பித்து விட ஆசைப்படுவோம். இருப்பினும், இது விலகி ஓடுவதற்கான நேரம் அல்ல. நாம் இருக்கும் காலத்தை புரிந்து, இக்காலத்தில் தேவ ராஜ்யத்தை எவ்வாறு நிலைநிறுத்துவதில் எப்படி முன்னேறலாம் என்பதற்கான உத்திகளைப் பெறுவதற்கு எங்களுடன் இணையுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் பதிப்பகத்தாருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://bakerpublishinggroup.com/books/the-way-of-the-kingdom/395661/ஐ பார்வையிடுங்கள்