தேவ இராஜ்ஜியத்தின் வழிகள்மாதிரி

The Way of the Kingdom

5 ல் 3 நாள்

எதிர்ப்புகள் தவிர்க்க முடியாதவை

தேவனுடைய ஒவ்வொரு அசைவும் எதிரியின் எதிர்ப்பை சந்தித்தது. எதிர்ப்பு இல்லாத விசுவாசம் என்று ஒன்றில்லை. எதிர்ப்பு இல்லாத எழுப்புதல் என்று ஒன்று இல்லை. எழுப்புதல் என்பது தற்போதுள்ள நிலையை மாற்றி அமைக்கிறது, அது தனி ஒருவரின் வாழ்க்கையில், மக்கள் மத்தியில், அரசாங்கத்தில், தேசத்தில் உள்ள இருளைக் கலைகிறது. இப்படி நடப்பதற்கு காரணம் தேவராஜன் என்பது பிரிக்கும் கோடு. தேவ ராஜ்ஜியத்தில் ஒரு கால் இவ்வுலகில் ஒரு கால் என்று யாராலும் நிற்க முடியாது. தேவ ராஜ்யத்தின் ராஜா கைதியின் இருளைக் கலைய முயற்சிக்கிறார், அதே சமயம் எதிரி அவரை தடுக்கவும் அந்த இருளை அதிகரிக்கவும் முயற்சிக்கிறான்.

பரலோக ராஜ்யத்தில் சிறியவனாய் இருப்பவன் யோவான் ஸ்நாகனைக் காட்டிலும் பெரியவனாய் இருப்பான் என்று இயேசு சொல்கிறார் (மத்தேயு 11:11ஐப் பார்க்கவும்). இதற்கு என்ன அர்த்தம்? ஆவியானவர் மூலமாக நமக்கு தேவனுடைய பிள்ளைகள் என்ற வல்லமையும் அதிகாரமும் உண்டு என்று இயேசு சொல்கிறார். கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது என்று எச்சரிக்கிறார். தேவராஜ்யம் வரும்போது, ​​அது ஒரு புதிய அரசாங்கத்தையும் ஒரு புதிய ராஜாவால் ஆளப்படும் புதிய உடன்படிக்கை மக்களையும் கொண்டுவருகிறது.

தீமை மற்றும் இருளால் ஆளப்படும் இவ்வுலகில் நீதியான வாழ்வு வாழ்வது என்பது அரசியல் நேர்மைக்கும், கலாச்சார மாநாடுகளில் பேசப்படும் கலாச்சாரத்தையும் எதிர்த்து வாழ்வது என்பதை இயேசு நன்றாக அறிந்திருந்தார். பரலோக ராஜ்ஜியம் பலவந்தம் பண்ணப்படுகிறது என்று இயேசு சொல்கையில் (மத்தேயு 11:12ஐப் பார்க்கவும்), அவர் ஒரு செயலையும் அதின் எதிர்வினை வடிவத்தையும் ஒப்புக் கொள்கிறார். வேதம் முழுவதும் இப்படிப்பட்ட வடிவங்களை நாம் பார்க்க முடியும். தேவன் ஒன்றை செய்வார், பிசாசு அதனை எதிர்ப்பான். ஆதியில் இருந்தே காரியங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

தேவராஜ்யம் முழுமையாக உணரப்படும் வரை உலகில் நிரந்தர விரோதம் இருக்கும். இறுதியில், ஸ்தீரியின் வித்து—இயேசு கிறிஸ்து— மேலும் கிறிஸ்துவுக்கு உள்ளானோர் அனைவரும் வெற்றி பெறுவார்கள். அதுவரை, தேவராஜ்யம் எதிர்ப்பின் மத்தியிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

இயேசு இருளை தூக்கி எறிந்து, நற்செய்தியை விளக்கியது போல நாமும் செய்ய வேண்டும். ஆம் எதிர்ப்புகள் தவிர்க்க முடியாதது. ஆனால் வெற்றி நிச்சயம்.  


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Way of the Kingdom

தேவன் தமது திருச்சபையை எழுப்புகிறார், எழுப்பதலை ஊற்றுகிறார். நாம் விரிந்த மனப்பான்மையோடு அதனை நோக்க வேண்டும். இது போன்ற கடினமான நேரங்களில், தப்பித்து விட ஆசைப்படுவோம். இருப்பினும், இது விலகி ஓடுவதற்கான நேரம் அல்ல. நாம் இருக்கும் காலத்தை புரிந்து, இக்காலத்தில் தேவ ராஜ்யத்தை எவ்வாறு நிலைநிறுத்துவதில் எப்படி முன்னேறலாம் என்பதற்கான உத்திகளைப் பெறுவதற்கு எங்களுடன் இணையுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் பதிப்பகத்தாருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://bakerpublishinggroup.com/books/the-way-of-the-kingdom/395661/ஐ பார்வையிடுங்கள்