தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 32 நாள்

திருப்தி கியாரண்டி

தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பண்ணையிலேயே கழித்துவிட்ட ஒரு விவசாயி பண்ணையின் மேல் சலிப்பு ஏற்பட்டவராக அதை விற்றுவிட்டு ஒரு பட்டணத்துக்குப் போக முடிவு செய்தார். அவரது மூன்று பிள்ளைகளும் திருமணமாகி சொந்த வீடுகளுக்குப் போய்விட்டார்கள். தனது வயதான காலத்தை அமைதியான வித்தியாசமான இன்னொரு இடத்தில் கழிக்க விரும்பினார். அந்த ஊரில் இருந்த வீட்டுமனை விற்பவரிடம் தன் ஆசையைச் சொன்னார். அவர் இவரது பண்ணையை சுற்றிப் பார்த்து கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த பண்ணையை எளிதாக விற்றுவிடலாம் என்று சொல்லிச் சென்றார்.

அடுத்த நாள் தினசரிப் பத்திரிக்கையில் பண்ணையைப் பற்றிய விளம்பரம் வந்திருந்தது. நிலத்தைப் பற்றிய நல்ல விஷயங்கள் பட்டியலாகக் கொடுக்கப்பட்டிருந்தன. நிலத்தின் தன்மையும், அழகும், அங்கு இருக்கும் சிறப்பான அம்சங்களும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. இரண்டாவது தடவை அதை வாசித்தார் விவசாயி. உடனடியாக வாகனத்தை எடுத்துக் கொண்டு போய் வீட்டுமனை விற்பனையாளரைப் பார்த்து, விளம்பரத்தை வாசித்தேன். இப்படிப்பட்ட ஒரு இடத்தைத் தான் நான் விரும்பினேன். நானே அந்தப் பண்ணையை வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

மனிதனுக்கு திருப்தி என்பது எளிதில் கிடைப்பதில்லை. கடவுள் தரும் திருப்தியானது உண்மையாகவே திருப்தி தரும். தாகம் திரும்பத் திரும்ப வரும், வர வேண்டும். ஆனால் பேரின்ப நதியால் தீர்க்கப்படும் தாகமானது நமக்கு தெய்வீக திருப்தியைத் தரும்.

சிந்தனை : தாகத்துக்கு பாத்திரத்தில் நீர் போதும். ஆனால் பேரின்ப நதியையே தரும் அளவு அக்கறையுள்ளவர் நம் ஆண்டவர்.

ஜெபம் : ஜீவத்தண்ணீரே உம்மில் தாகம் தீர்க்க, உம்மால் தாகம் தீர எனக்குள் நீர் ஊற்றாக வாரும். திருப்தியைத் தாரும். ஆமென்.

நாள் 31நாள் 33

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org