தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
ஒப்பிலான்
உலக மதங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு கருத்தரங்கம் இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவத்துக்கு மட்டுமே உரிய தனித்தன்மையான அம்சம் என்னவென்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. இயேசுவின் மனித அவதாரத்தைப் போலவே பல மதங்களில் இருப்பதால் அதை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். இவ்வாறே உயிர்த்தெழுதலும் பிற சமயங்களில் அதைப் போன்ற நிகழ்ச்சிகள் இருப்பதாகச் சொல்லி நீக்கப்பட்டது. இவ்வாறாக விவாதம் சென்று கொண்டிருந்த போது அறிஞர் சி.எஸ்.லூயிஸ் அந்த அறைக்குள் வந்து நீங்கள் எதைப் பற்றி இத்தனை கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாராம். அவர்கள் நாங்கள் கிறிஸ்தவத்தின் தனித்தன்மையான அம்சம் என்ன என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்களாம். லூயிஸ் அவர்கள் அது எளிதானது, கிருபை தான் கிறிஸ்தவத்தின் தனித்தன்மை என்றார். கிறிஸ்தவத்தில் மட்டுமே எந்த நிபந்தனையும் இல்லாத அன்பு மனிதர்களுக்குக் கடவுளால் வழங்கப்படுகின்றது. ஒரு இந்து நண்பர் கிறிஸ்தவர் ஒருவரிடம், எங்கள் மதத்திற்கும் உங்கள் மதத்திற்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் எங்களிடம் இல்லாத ஒன்றே ஒன்று இரட்சகர் தான் என்றாராம். ஆம் கிறிஸ்து மட்டுமே எந்த நிபந்தனையும் இல்லாமல் இலவசமாகத் தன் அன்பையும் இரட்சிப்பையும் தருகிறார்.
கடவுளுக்கு ஒப்பாக யாருமே இல்லை என்னும் செய்தி தாவீதின் எலும்பு வரைக்கும் பரவியிருந்திருக்கிறது. கடவுளுடனான ஆழமான உறவும் பிற தெய்வங்களைப் பற்றிய அறிவும் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. கடவுளின் குணங்களையும் அவரது பெருமைகளையும் தியானித்தால் நாமும் தாவீதைப் போலவே சொல்லலாம், “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.”
சிந்தனை : கடவுள் யாருக்கும் நிகரானவர் அல்ல.ஆனாலும் அவர் நம் மேல் அளவில்லாத அன்பு வைத்திருக்கிறார்.
ஜெபம் : ஆண்டவரே உமது புகழைப் பாடும் பாக்கியத்தையும். உமது அன்பை ருசிக்கும் அனுபவத்தையும் எனக்கு எப்போதும் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org