தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
புல்ப்பூண்டு
கோல்கேட் பற்பசை மற்றும் வியாபார நிறுவனத்தை தோற்றுவித்த சாமுவேல் கோல்கேட் என்பவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருந்தார். அவர் உறுப்பினராக இருந்த ஆலயத்தில் ஒரு நாள் நற்செய்திக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த ஊரின் விபச்சாரி தன் வாழ்க்கையை இயேசுவுக்கென்று அர்ப்பணித்தாள். அழுது கடவுளிடம் மன்னிப்புக் கேட்டாள். ஆலயத்தின் மக்கள் அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனது பழைய வாழ்க்கையை கடவுள் மன்னித்தார் என்று தான் நம்புவதாக அவள் பின்னர் சாட்சி சொன்னாள். அத்துடன் அதே திருச்சபையில் உறுப்பினராக வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தாள். சில நிமிடங்கள் ஆலயமே அமைதியாக இருந்தது.
கோல்கேட் எழுந்து பேசினார், “கடவுள் பாவிகளை மன்னிக்க வேண்டும் என்று ஜெபித்ததில் நாம் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட பாவிகளை எல்லாம் மன்னிக்க வேண்டும் என்று கடவுளிடம் சொல்ல மறந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இந்தத் தவறை மன்னிக்கும்படி கடவுளிடம் நாம் ஜெபிக்க வேண்டும். ஆவியானாவர் அந்தப் பெண்ணைத் தொட்டு அவளை உண்மையாகவே மனந்திரும்பச் செய்திருக்கிறார். ஆனால் ஆண்டவருக்கு இப்படிப்பட்ட பெண்ணை இரட்சிப்பது நமக்கெல்லாம் விருப்பமானது அல்ல என்று தெரியவில்லை. ஆகவே இனிமேல் எப்படிப்பட்ட பாவிகளை இரட்சிக்க வேண்டும் என்ற பட்டியலை ஆண்டவரிடம் கொடுப்போம்.”
உடனடியாக ஆலயத்தின் மூப்பர்கள் கூடி அந்தப் பெண்ணை ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் தீர்மானத்தை ஒருமனதாகச் செய்தார்கள். பொல்லாதவர்களின் அழிவு நிச்சயம் என்பது தாவீதின் கருத்து. ஆனால் எல்லாருக்கும் பாவமன்னிப்புக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது இயேசுவின் கிருபையின் செய்தி. இயேசுவைன் அழைப்பை ஏற்காதவர்கள் தான் கடைசியில் நியாயத்தீர்ப்பில் நரகத்தில் அழிக்கப்படுவார்கள்.
சிந்தனை : இயேசு பாவிகளை அழிக்கிறார், அவர்களைத் தன் பிள்ளைகளாக மாற்றுவதன் மூலம்.
ஜெபம் : ஆண்டவரே பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலோ பொறாமையோ அடையாமல் அவர்களின் மனமாற்றத்திற்காக ஜெபிக்க எனக்கு மனதைத் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org