தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 35 நாள்

வாய்க்கட்டு

ஜூன் 2002இல் பிரிட்டிஷ் இசைக்குழுவினரான ‘த ப்ளானட்’ என்பவர்கள் 60 வினாடி அமைதியைத் தங்கள் புதிய இசைத் தொகுப்பில் பாடல்களின் நடுவில் புகுத்தினார்கள். ஜான் கேஜ் என்பவர் முன்பு ஒரு காலத்தில் 273 வினாடிகள் அமைதியைத் தனது இசைத் தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார். அவரது வழக்கறிஞர்கள் இந்தக் குழுவின் மேல் வழக்குத் தொடுப்பதாக பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த 273 விநாடிகளில் எந்த 60 வினாடிகளை இவர்கள் எடுத்தார்கள் என்று தெளிவு படுத்தாததால் அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று ப்ளானட் குழுவினர் தெரிவித்தார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறாகச் சொன்னார், “எங்கள் அமைதி தான் மிகவும் சிறந்ததாகும். ஏனென்றால் ஜான் கேஜ் 273 வினாடிகளில் செய்ய முடியாததை நாங்கள் 60 வினாடிகளில் சாதித்துவிட்டோமே.”

அமைதி காப்பது அதிக நன்மைகளைத் தரும் என்பதை நாம் அனுபவத்தில் அறிந்திருப்போம். நமது வாயை வீணாக பயன்படுத்துவதால் பாவம் செய்ய வாய்ப்புக்கள் இருக்கின்றன. தீயவர்கள் நடுவே பேசப்படும் நல்ல வார்த்தைகள் கூட தீமையையே தரும் என்பதால் தாவீது தனது வாயை கடிவாளத்தால் அடக்கி வைப்பதாகச் சொல்கிறார்.

மக்களிடம் பேசாமல் இருப்பது நமக்கு கஷ்ட்டமாகத் தான் இருக்கும். ஆனால் கடவுளிடம் நாம் பேசலாம். “என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம்செய்தேன்.”

எல்லோரும் பிறரைப் பற்றிப் பேசும் பேச்சுக்களையும், செல் ஃபோன் மற்றும் சாட் மூலம் பேசப்படும் வீண் வார்த்தைகளையும் குறைத்தால் நமது வாழ்வில் அமைதியும், பக்தியும், நன்மையும் அதிகரிக்கும்.
 

சிந்தனை : கடவுள் ஒரு வாயையும் இரு காதுகளையும் கொடுத்ததற்குக் காரணம் கேட்பதில் பாதி தான் பேச வேண்டும் என்பதற்காகவே.

ஜெபம் : கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும். நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும். ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org